Published:Updated:

இப்படியும் ஒரு டீ கடை ஓனர் - 300 நாள் வேலை பார்த்தால் தங்க மோதிரம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இப்படியும் ஒரு டீ கடை ஓனர் - 300 நாள் வேலை பார்த்தால் தங்க மோதிரம்! 
இப்படியும் ஒரு டீ கடை ஓனர் - 300 நாள் வேலை பார்த்தால் தங்க மோதிரம்! 

இப்படியும் ஒரு டீ கடை ஓனர் - 300 நாள் வேலை பார்த்தால் தங்க மோதிரம்! 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இப்படியும் ஒரு டீ கடை ஓனர் - 300 நாள் வேலை பார்த்தால் தங்க மோதிரம்! 

 உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னையில் டீ கடை நடத்தி வரும் ஒருவர், வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தங்க மோதிரம், ஊதிய உயர்வு கொடுத்து அசத்தியுள்ளார். 

கேரளம் மாநிலம், கண்ணூர் மாவட்டம் பாட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவர், கேரளாவிலிருந்து கடந்த 1971-ம் ஆண்டு சென்னைக்கு டீ கடைக்கு வேலைக்கு வந்தார். இன்று 5 டீ கடைகளுக்கு ஓனர். இடதுசாரி சிந்தனை கொண்ட சுகுமாறன், தன்னுடைய கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தினத்தையொட்டி தங்க மோதிரம், ஊதிய உயர்வு, போனஸ், நட்சத்திர ஓட்டல்களில் விருந்து எனக் கொடுத்து அசத்தியுள்ளார். 

 சுகுமாறனிடம் பேசினோம் "கடந்த 1971ம் ஆண்டு கேரளாவிலிருந்து வேலை தேடி சென்னை வந்தேன். சிந்தாரிப்பேட்டையில் உள்ள டீ கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகளாக அந்தக் கடையில் வேலை பார்த்தேன். அதன்பிறகு 8 கடைகளில் பணியாற்றினேன். அந்தக் காலகட்டத்தில் சென்னை நகர டீ கடை தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தோம். அந்தச் சங்கத்தின் மூலம் டீ கடை தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்துவருகிறோம். 

இப்படியும் ஒரு டீ கடை ஓனர் - 300 நாள் வேலை பார்த்தால் தங்க மோதிரம்! 

 டீ கடை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் 60,000 ரூபாய் எனக்கு நீதிமன்றம் வழங்கியது. அந்தப் பணத்தைக் கொண்டு அடையாறு பகுதியில் டீ கடையைத் தொடங்கினேன். கடின உழைப்பு, விடா முயற்சியால் டீ கடை மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. அடையாறு, பெருங்குடி, எனச் சென்னையில் 5 இடங்களில் சிக்காகோ என்ற பெயரில் டீ கடையைத் தொடங்கினேன். அந்தக் கடைகளில் 45 தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். அனுபவத்துக்கு ஏற்ப தினமும் 400 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கிவருகிறோம். என்னுடைய கடைகளில் நீண்டகாலமாக வேலை பார்ப்பவர்களிடம் கடையின் பொறுப்பை ஒப்படைத்துள்ளேன். என்னுடைய பொறுப்பில் அடையாறு டீ கடை மட்டுமே உள்ளது. 

 ஒவ்வொரு மே தினத்தையொட்டி டீ கடைகள் முன்பு சிஐடியூ கொடி ஏற்றப்படும். தொழிலாளர்களுக்கு டீயோடு டிபனும் இலவசமாக வழங்குவோம். அதன்பிறகு நட்சத்திரஓட்டல்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று அவர்களுடன் ஆலோசனை நடத்துவோம். அப்போது 300 நாள்களுக்கு மேல் வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். அதோடு நட்சத்திர ஓட்டலில் விருந்து, இன்று முதல் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.  இன்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிஜடியுவின் அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இது, 35வது ஆண்டு நிகழ்ச்சி" என்றார் 

இப்படியும் ஒரு டீ கடை ஓனர் - 300 நாள் வேலை பார்த்தால் தங்க மோதிரம்! 

 சுகுமாறனிடம் உங்களின் வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு `அது ஒன்றுமில்லை. ஒவ்வொரு தொழிலாளரிடமும் நான் சொல்வது ஒன்றுதான். நான் உங்களுக்கு முதலாளி இல்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் முதலாளி. டீ யின் விலை 10 ரூபாய் என்றால் அதற்கேற்ப தரமாக டீ கொடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்' என்றார். 

கடையின் பெயர் சிகாகோ என்று எதற்காக வைத்தீர்கள் என்று கேட்டதற்கு `அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேரம் வேலை 8 மணி நேரம் ஓய்வு என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர். அதனால்தான் என்னுடைய கடைக்கு சிகாகோ என்று பெயரிட்டேன்' என்றார். 

 மேலும் அவர் கூறுகையில்,` டீ கடையில் வேலை பார்ப்பவர்களின் உரிமைகள் ஒருநாளும் பறிக்கப்படக் கூடாது. அதனால்தான் மே தினத்தில் அவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறேன். தொழிலாளர்களையும் மதிக்க வேண்டும். அப்போதுதான் நாமும் அவர்களும் முன்னேற முடியும்' என்றார். 

 நட்சத்திர ஓட்டலில் டீ கடையில் வேலை பார்த்தவர்களுடன் சுகுமாறனும் அமர்ந்து ஒன்றாகச் சாப்பிட்டார். கேரள வகை உணவு பரிமாறப்பட்டது. இடதுசாரி சிந்தனையுடைய சுகுமாறனுக்கு வயது 70 ப்ளஸ். இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட்டுவருகிறார். இந்த மே தினத்தில் ஐந்து தொழிலாளர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு