உங்கள் வீட்டுக் குழந்தையும் சூப்பர்ஹீரோ ஆகலாம்! #Every_Kid_is_a_SuperHero | Max kids Festival

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (02/05/2019)

கடைசி தொடர்பு:12:35 (02/05/2019)

உங்கள் வீட்டுக் குழந்தையும் சூப்பர்ஹீரோ ஆகலாம்! #Every_Kid_is_a_SuperHero

உங்கள் வீட்டு சுட்டிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும்நேரமிது. துருதுருவென சுற்றித்திரியும் குழந்தைகளுக்கு லீவ் விட்டவுடன் என்னசெய்வதென்றே தெரியாது. முன்பு போல கிரிக்கெட் பேட்டைத்தூக்கிக்கொண்டுவீதிகளுக்குக் கிளம்பும் குழந்தைகள் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இன்றுவீடியோ கேம்ஸ், டி.வி., ஸ்மார்ட்போன் என வீட்டுக்குள்ளேயே குழந்தைகள் அடைந்துகிடக்கின்றனர். இவ்வாறு இருக்கும் குட்டீஸ்களுக்கு சுவாரஸ்யமான ஒரு டாஸ்க்கொடுத்தால், அவர்களின் ஆர்வம் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும்! இதுமட்டுமல்லாதுசுட்டி விகடன் இதழில் உங்களின் குழந்தையும் இடம்பெற ஒரு வாய்ப்பு கிடைத்தால்,அதைத் தவறவிடலாமா!?

திறமையான உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்காக மேக்ஸ் நிறுவனம் 'Every Kid is a SuperHero' காண்டஸ்ட்டை அறிவித்துள்ளது. ஓவியம் வரைதல், ஆடல் மற்றும் பாடல்என மூன்று விதமான போட்டிகள் நடைபெறவுள்ளன. 2-4 வயது, 5-7 வயது, 8-10 வயதுஎன மூன்று பிரிவுகளாக, இந்த மூன்று போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

முதல் கட்ட போட்டிகள், சென்னை ஃபாரம் விஜயா மால்-இல், மே மாதம் 17 மற்றும் 18அன்று, காலை 10 மணிமுதல் 6.30 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் தேர்வாகும்சுட்டிகளுக்கு மே 19 (ஞாயிறு) அன்று ஃபாரம் விஜயா மால்-இல் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம். இந்தப் போட்டியில் பங்கெடுக்க உங்களின் அருகில் உள்ளமேக்ஸ் ஸ்டோருக்குச் சென்று போட்டிக்கான படிவத்தைப் பூர்த்தி செய்துவிண்ணப்பிக்கவும். 

இறுதிப் போட்டியில் வெற்றி பெரும் குழந்தைகளுக்கு மேக்ஸ் ஸ்டோர் வழங்கும்சிறப்புப் பரிசுகள் கிடைப்பதோடு,சுட்டி விகடன் இதழின் அட்டைப்படத்தில் வரும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது, பதிவுசெய்யும் ஒவ்வொரு குழந்தைக்கும் நிச்சயப் பரிசு உண்டு;உங்களுக்கு அருகிலுள்ள மேக்ஸ் ஸ்டோருக்குச் சென்று பரிசைப்பெற்றுக்கொள்ளலாம்!

போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க கடைசி நாள்:

சென்னை, கோயம்பத்தூர் மற்றும் வேலூரைச் சேர்த்தவர்களுக்கு : மே 15, 2019

ஓசூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, மதுரை மற்றும் திருச்சியைச் சேர்ந்தவர்களுக்கு : மே19, 2019 (இந்தப் பகுதியை சேர்ந்தவர்களுக்கான போட்டிகளின் தேதி பற்றியதகவல்களை மேக்ஸ் ஸ்டோரில் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்).

மேலும் விவரங்களுக்கும், போட்டி பற்றிய தகவல்கள்/விதிமுறைகளுக்கு, இந்தலிங்கைக் க்ளிக் செய்யவும்... http://www.maxkidsfestival.com/

நீங்க எப்படி பீல் பண்றீங்க