"அதுக்கும் பசிக்கும்ல... காரை நிறுத்துங்க" - அனகோண்டா பாம்புக்கு வழிவிட்ட பயணிகள்! | anakonda crossing the road in brazil

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (02/05/2019)

கடைசி தொடர்பு:13:07 (02/05/2019)

"அதுக்கும் பசிக்கும்ல... காரை நிறுத்துங்க" - அனகோண்டா பாம்புக்கு வழிவிட்ட பயணிகள்!

ணவு தேடி அனகோண்டா பிரேசிலின் சாலைகளை மெதுவாகக் கடந்து சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அப்படியே வானங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனகோண்டா சாலையைக் கடக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அனகோண்டா

பிரேசில் நாட்டின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம், போர்டோ வெல்ஹோ. பிசியான இந்த நகரத்தின் சாலையில் அதிகமான வாகனங்கள் பயணிப்பது வழக்கம். நேற்று எப்போதும் வழக்கம்போல வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தன. அப்போது திடீரென சாலையின் குறுக்கே மிகப்பெரிய அனகோண்டா ஒன்று கடக்க முற்பட்டது. அதனால் வாகனங்கள் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இருந்தாலும் பொறுமையுடன் அனகோண்டா கடப்பதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்து புகைப்படமும், வீடியோக்களும் எடுத்தனர். அனகோண்டா கடக்கும் நேரம் வரைக்கும் பயணிகள் மற்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பார்த்து, ஷேர் செய்து வருகின்றனர். 

 

 

 

அந்த அனகோண்டா 30 கிலோ எடையும், 3 மீட்டர் நீளமும் கொண்டதாக இருந்தது. ``அனகோண்டா பாம்பு பசியின் காரணமாக ஏதாவது உணவு கிடைக்குமா என்று தேடி சாலையைக் கடந்து சென்று இருக்கிறது. இத்தகைய பாம்புகள் அதிகமாக ஊருக்குள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் உள்ளிட்டவற்றை உணவாக உட்கொண்டு சென்றுவிடுகின்றன. இவை குப்பை நிறைந்த பகுதிகளில் பதுங்கியிருக்கும் என்பதால், குப்பைப் பகுதிகளை கவனமுடன் கடக்க வேண்டும். நாய், பூனைகளின் வாசனையை நுகர்ந்து வீட்டுக்கு அருகிலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார், பிரேசில் உயிரியல் வல்லுநர் பிளாவிய டெராசினி.

பசியால் உணவு தேடி அனகோண்டா ஊருக்குள் வந்த சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.