இது அயர்ன்மேனின் 'கேர்ள்ஸ் ஒன்லி' ட்ரீட்! வைரலாகும் புகைப்படங்கள் | Iron man hosts Lunch for female superheros! Viral Photos

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/05/2019)

கடைசி தொடர்பு:19:40 (02/05/2019)

இது அயர்ன்மேனின் 'கேர்ள்ஸ் ஒன்லி' ட்ரீட்! வைரலாகும் புகைப்படங்கள்

மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் பலரும் ஒன்றிணைந்த 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' திரைப்படம், கடந்த வாரம் வெளியாகி உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனை சூப்பர் ஹீரோக்கள் இருக்கும் இந்த மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸை நமக்கு அறிமுகப்படுத்தியது 'அயர்ன்மேன்' திரைப்படம்தான். அந்தப் படம் கொடுத்த வீச்சில்தான், 10 வருடங்கள் 20-க்கும் மேற்பட்ட படங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கின்றன. அயர்ன்மேன் கதாபாத்திரம் பிரபலமாக முக்கியக் காரணம், அதில் நடித்த ராபர்ட் டௌனி ஜூனியர்தான். இவருக்கெனவே தனி ரசிகர்படை உண்டு. அவெஞ்சர்ஸ் ஷூட்டிங்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட, அது இப்போது செம வைரல்.

லேடி சூப்பர்ஹீரோக்களுக்கு ட்ரீட் வைத்த அயர்ன்மேன்

ஷூட்டிங்கின்போது, பெண் சூப்பர் ஹீரோக்களாக நடித்த நடிகைகள் அனைவருக்கும் லஞ்ச்சை ட்ரீட்டாக வைத்திருக்கிறார், ராபர்ட் டௌனி ஜூனியர். கேப்டன் மார்வெல், அயர்ன்மேன் ஜோடியான பெப்பர் பாட்ஸ், ஸ்கார்லெட் விட்ச் போன்ற முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் அனைவரும் இதில் பங்குபெற்றனர். பிளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோகன்சன் மட்டும் மிஸ்ஸிங். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை #throwback என ஜாலியாக ராபர்ட் டௌனி ஜூனியர் பதிவிட, இதுவரை 1 கோடிக்கும் மேலான மக்கள் இதை லைக் செய்துள்ளனர். 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' திரைப்படமும் உலகமெங்கும் மக்கள் மனதைக் கவர்ந்து வசூல் வேட்டை புரிந்துவருகிறது. எப்படியும் 'அவதார்' வசூலை இது விஞ்சிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க