`இனி குளுகுளுனு இருக்கும்!' - விலங்குகளுக்கு ஏர் கூலர் ஏற்பாடு செய்த விலங்கியல் பூங்கா | 'Now we can relax' Zoo sets up Aircoolers for animals

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (03/05/2019)

கடைசி தொடர்பு:13:05 (03/05/2019)

`இனி குளுகுளுனு இருக்கும்!' - விலங்குகளுக்கு ஏர் கூலர் ஏற்பாடு செய்த விலங்கியல் பூங்கா

மே மாதம் தொடங்கிவிட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்கிறது. சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியஸை கடந்துவிட்டது. குஜராத்தில் நிலைமை இன்னும் மோசம். சில பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருக்கிறது. இந்தக் கடும்வெயில் அங்கிருக்கும் மனித வாழ்க்கை மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அதுவும் தங்களது இயற்கை இருப்பிடத்தில் இல்லாதவை இந்தத் தாக்கத்தை அதிகமாக உணர்கின்றன. அப்படிதான் வதோதரா மாவட்டத்தில் இருக்கும் சாயாஜி பாக் உயிரியல் பூங்காவிலும் அகமதாபாத்தில் இருக்கும் கமலா நேரு விலங்கியல் பூங்காவிலும் இப்படி கடும் வெயிலைச் சந்திக்கின்றன அங்கிருக்கும் விலங்குகள்.

விலங்குகளுக்கு ஏர் கூலர்

Pic: Nilkanth Dev

இதிலிருந்து அந்த விலங்குகளைப் பாதுகாக்க பல ஏற்பாடுகளைச் செய்துவருகிறது அந்த உயிரியல் பூங்கா நிர்வாகங்கள். வெயிலைத் தாக்குப்பிடிக்க விலங்குகளுக்கு தர்பூசணி, கரும்பு, பப்பாளி போன்ற பழங்கள் கொண்ட ஊட்டச்சத்து அதிகமான உணவுகள் கொடுக்கப்படுகின்றன. நீர்சத்து குறையாமல் இருக்க க்ளுகோஸும் இவற்றுக்குக் கொடுக்கப்படுகிறது. விலங்குகள் இருக்கும் இடங்களில் பச்சை நிற வலைகள் கட்டப்படுகின்றன. பல விலங்குகளுக்கு ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கரடிகளுக்கு தண்ணீர்

Pic: https://twitter.com/ANI

கரடி போன்ற அதிக ரோமம் கொண்ட விலங்குகளின் மீது அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டு அவை இருக்கும் இடத்தில் பெரிய ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டு முடிந்தளவு வெயிலின் தாக்கம் குறைக்கப்பட்டுவருகிறது. மேலும் கால்நடை மருத்துவர்களின் மேற்பார்வையுடன் சில மாத்திரைகளும் தரப்படுகின்றன. அதில் பல, வெயிலால் ஏற்படும் மன உளைச்சலைக் குறைக்கவே. ஏற்கெனவே சாயாஜி பாக் உயிரியல் பூங்காவில் வெயிலின் தாக்கத்தால் 4 குருவிகள் இறந்துவிட்டன. ஆனால் இந்த வெயிலிலும் இந்த உயிரியல் பூங்காக்களில் மக்கள் வருகை என்பது குறையவில்லை.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க