இனி தாய்லாந்துக்கு VOA கட்டணமில்லாமல் பயணிக்கலாம்... ரூ.4,400 மிச்சப்படுத்தலாம்! | Thailand extends the scheme of waiving VOA fee till October 31

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (03/05/2019)

கடைசி தொடர்பு:19:20 (03/05/2019)

இனி தாய்லாந்துக்கு VOA கட்டணமில்லாமல் பயணிக்கலாம்... ரூ.4,400 மிச்சப்படுத்தலாம்!

அக்டோபர் 31-ம் தேதி வரை தாய்லாந்து நாட்டிற்கான விசா கட்டணம் தள்ளுபடி செய்திருப்பதால், அதற்கெனத் தனியாக செலவுசெய்யத் தேவையில்லை. அந்நாட்டு அரசாங்கம்...

தாய்லாந்துதாய்லாந்து நாட்டை நேசிப்பவர்களுக்கும், அந்நாட்டிற்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கும் ஒரு  நற்செய்தி. அக்டோபர் 31 வரை VOA (visa on arrival) கட்டணம் தள்ளுபடி செய்வதற்கான திட்டத்தை தாய்லாந்து அரசு விரிவுபடுத்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டின் நவம்பர் 15-ம் தேதி முதல், 2019 ஜனவரி 13-ம் தேதி வரை  VOA கட்டணம் இல்லாமல் தாய்லாந்துக்குச் செல்லும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அமல்படுத்தியிருந்தது. அதை, வருகிற அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறது. இதன்மூலம் தாய்லாந்து சுற்றுலா பட்ஜெட்டிலிருந்து, விசா பெறுவதற்காக செலவுசெய்யும்  4,400 ரூபாய் பணத்தை ஒவ்வொருவரும் மிச்சப்படுத்த முடியும். 

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்றால், அந்தந்த நாட்டிற்கான விசா அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும். இதற்குப் பெருமளவு பணத்தைச் செலவுசெய்ய வேண்டியிருக்கும். அக்டோபர் 31-ம் தேதி வரை தாய்லாந்து நாட்டிற்கான விசா கட்டணம் தள்ளுபடி செய்திருப்பதால், அதற்காகத் தனியாக செலவுசெய்யத் தேவையில்லை. 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில்தான், தாய்லாந்து அரசு விசா ஃப்ரீ டிராவல் நாள்களை அதிகப்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்திலிருந்து, நடப்பு ஆண்டின் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தாய்லாந்து நாட்டிற்குப் பயணித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இதற்கு முந்தைய ஆண்டுகளின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 83% அதிகரித்திருப்பதாக, அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியா, சீனா உள்பட 21 நாடுகளில் VOA திட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.