'ரொனால்டோதான் இங்க ராஜா!' இன்ஸ்டாகிராமின் டாப் 10 சூப்பர்ஸ்டார்ஸ் #VikatanInfographics | Top 10 Instagram Celebrities In the world!

வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (04/05/2019)

கடைசி தொடர்பு:18:39 (04/05/2019)

'ரொனால்டோதான் இங்க ராஜா!' இன்ஸ்டாகிராமின் டாப் 10 சூப்பர்ஸ்டார்ஸ் #VikatanInfographics

இன்றைக்கு ஒவ்வொரு பிரபலத்தின் சமுக வலைதளங்களையும் சோஷியல் மீடியா மேனேஜிங் நிறுவனங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்களே கையாள்கின்றன. இன்டர்நெட் மொழி புரிந்து இந்நிறுவனங்கள் செயல்படுவதால் எப்போதும் பிரபலங்களின் பக்கங்களை ட்ரெண்டிங்காக வைத்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் எல்லா பிரபலங்களுக்கும் அமைந்தாலும், எல்லோரின் அக்கவுன்ட்களும் அதிக ஃபாலோயர்களைப் பெறுவதில்லை.

'ரொனால்டோதான் இங்க ராஜா!' இன்ஸ்டாகிராமின் டாப் 10 சூப்பர்ஸ்டார்ஸ் #VikatanInfographics

திக உழைப்பும், அதிக முயற்சியும் கொண்டு ஏதாவது ஒரு சாதனையைச் செய்தால்தான் உலகளவில் பிரபலமடையும் முடியும் என்ற நிலை மாறி, ஏதாவது வித்தியாசமாகச் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே போதும் பிரபலமடைந்து விடலாம் என்கிற நிலை தற்போது உள்ளது. இதற்கேற்றவாறு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இப்படி திடீரென ட்ரெண்டாகும் தனிமனிதர்கள் ஒருபக்கம் இருந்தாலும், பிரபலங்களின் ஆதிக்கம்தான் அவற்றில் எப்போதும் ஓங்கியிருக்கும். காரணம், இன்றைக்கு ஒவ்வொரு பிரபலத்தின் சமுக வலைதளங்களையும் சோஷியல் மீடியா மேனேஜிங் நிறுவனங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்களே கையாள்கின்றன. இன்டர்நெட் மொழி புரிந்து இந்நிறுவனங்கள் செயல்படுவதால் எப்போதும் பிரபலங்களின் பக்கங்களை ட்ரெண்டிங்காக வைத்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் எல்லா பிரபலங்களுக்கும் அமைந்தாலும், எல்லோரின் அக்கவுன்ட்களும் அதிக ஃபாலோயர்களைப் பெறுவதில்லை. காரணம், அந்த பிரபலத்தின் துறை, அதற்கென இருக்கும் பிரத்யேக ரசிகர்கள், அவரின் புகழ், மார்க்கெட், சமூக வலைதளங்களில் அவரின் தினசரி பயன்பாடு போன்ற பலவற்றையும் பொறுத்துத்தான் அது அமைகிறது. அப்படி எல்லா ஏரியாவிலும் ஹிட் அடித்து, இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கும் டாப் 10 பிரபலங்கள் பற்றிய விவரங்கள் இதோ.

இன்ஸ்ட்டாகிராம்

#1 கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

35 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ (CR7) தான் உலகிலேயே அதிக ஃபாலோயர்களை பெற்றவர். போர்ச்சுகல் நாட்டின் முகவரி, தூதுவர், அடையாளம் எனப் பலவாறு இவரைச் சொல்லலாம். இவர் பயிற்சி செய்யும் புகைப்படங்கள், செல்ஃபி எடுக்கும் புகைப்படங்கள், பந்துடன் இவர் பேசும் அனிமேஷன் வீடியோ எனப் பலவற்றிற்கு மில்லியன் லைக்ஸ்.  இவரை இன்ஸ்டாகிராமில் 163 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் தளம்: Cristiano Ronaldo

#2 அரியானா கிராண்டே 

அரியானா கிராண்டே

25 வயதான அரியானா கிராண்டேக்கு இன்ஸ்டாகிராமில் 152 மில்லியன் பேர் ரசிகர்கள் (ஃபாலோயர்கள்). செல்லப்பிராணி நாயுடன் செய்யும் சேட்டைகளை அவ்வப்போது புகைப்படம் எடுத்து, இன்ஸ்டாவில் பதிவிட்டு மில்லியன் லைக்ஸை வாங்கி விடுகிறார். தொலைக்காட்சித் தொடரில் நடித்துக்கொண்டிருந்த இவரின் முதல் பாடல் 2013-ல் தான் வெளிவந்தது. விக்டோரியஸ் தொடரின் மூலம் அவனைவரையும் கவர்ந்த இவர், தற்போது அதிக ஃபாலோயர்களைப் பெற்று உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 

இன்ஸ்டாகிராம் தளம்: Ariana Grande

#3 செலினா கோம்ஸ்

செலினா கோம்ஸ்

ஸ்பை கிட்ஸ் 3 திரைப்படம் மூலம் அறிமுகமாகி, நடிகை, பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் எனக் கலக்கிக் கொண்டிருக்கும் டாட்டு அழகி செலினா கோம்ஸிற்கு இன்ஸ்டாவில் 149 மில்லியன் ஃபாலோயர்கள். இன்ஸ்டாகிராம் இளவரசி என்றும் இவரைக் கூறுவார்கள். 26 வயதான இவர் செல்ஃபி என்ற பெயரில் செய்யும் சேட்டைகளுக்குத்தான் இவரின் ரசிகர்கள் லைக்ஸை கொட்டுகின்றனர். இவரின் புகைப்படங்களுக்குப் பல மில்லியன் லைக்ஸை எப்போதும் எதிர்பார்க்கலாம். கடந்த மாதம் வெளிவந்த இவரின் 'I Can't Get Enough' பாடல் யூடியூபில் 10 கோடிக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது. 

இன்ஸ்டாகிராம் தளம்: Selena Gomez

#4 டுவைன் டக்ளஸ் ஜான்சன் (தி ராக்)

தி ராக்

தி ராக் என அனைவராலும் அழைக்கப்படும் மல்யுத்த வீரர் டுவைன் டக்ளஸ் ஜான்சனுக்கு 140 மில்லியன் ஃபாலோயர்கள். 46 வயதான இவர் பெரும்பாலான இந்திய ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட் வீரர். இவரின் ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள், டக்கீலா அருந்தும் புகைப்படம் எனப் பலவற்றிற்கு மில்லியன் லைக்ஸ்தான். அவர் ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோவுக்கு மட்டும் 15.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது. அதிக ஃபாலோயர்களைப் பெற்று உலகளவில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் தளம்: The Rock

#5 கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

கர்தாஷியன் சிஸ்டர்ஸ் என்னும் தொடரின் மூலம் பிரபலமான இவர், சில பல 'சர்ச்சை' வீடியோக்களையும்,  செல்ஃபிகளையும் வெளியிட்டு அதிர வைத்தவர். சமீபத்தில் வழக்கறிஞராகப் போவதாகவும், அதற்காகப் பயிற்சி எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இவரை ஃபாலோ செய்தாலே போதும், அவரின் உறவுக்கார அழகிகளைப் பார்த்து ரசிக்கலாம் என்று மில்லியன் கணக்கானோர் இருக்கின்றனர். 38 வயதான இவருக்கு உலகம் முழுவதும் 136 மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதால் 5-வது இடத்தில் இருக்கிறார்.  

இன்ஸ்ட்டாகிராம் தளம்: Kim Kardashian

#6 கெய்லே ஜென்னர்

கெய்லே ஜென்னர்

21 வயதில் அதிக ஃபாலோயர்களைப் பெற்றவர் என்ற பெயரை இவர் பெற்றிருக்கிறார். வித்தியாசமாக இவர் பதிவிடும் புகைப்படங்களைப் பார்க்கவே 133 மில்லியன் பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவரின் காலணி படத்துக்கு மட்டும் 2.5 மில்லியன் லைக்ஸ் குவிந்துள்ளது. இவரின் தளத்தில் விதவிதமான வண்ணம் பூசப்பட்ட இவரின் கை நகங்களையே அதிகம் காணமுடியும். அதேபோல், கவர்ச்சியாக இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஹார்ட்ஸைப் பறக்க விட மில்லியன் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 

இன்ஸ்ட்டாகிராம் தளம்: Kylie

#7 பியான்ஸே நோல்ஸ்

பியான்ஸே நோல்ஸ்

நடிகை, பாடகி, இசைக்கலைஞர், ஆல்பம் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட இவருக்கு இன்ஸ்டாவில் 127 மில்லியன் ஃபாலோயர்கள். பாடல்களின் ப்ரோமோ புகைப்படங்கள், மேடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று எப்போதாவதுதான் புகைப்படங்களைப் பதிவிடுவார். ஆனால் அதற்காகவே காத்திருப்பது போல் மில்லியன் கணக்கான லைக்ஸ்கள் குவியும். 37 வயதான இவரின் தலை முடிக்கு மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று. இவரின் முடிக்கு மேக்கப் செய்யும் 10 செகன்ட் வீடியோவுக்கு மட்டும் 16.4 மில்லியன் லைக்ஸ், 59.4 ஆயிரம் கமென்ட்ஸ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

இன்ஸ்டாகிராம் தளம்: Beyoncé

#8 டெய்லர் ஸ்விஃப்ட்

டெய்லர் ஸ்விஃப்ட்

பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் 14 வயதிலேயே இசைத்துறையில் சாதிக்க டென்னஸி மாகாணத்துக்கு குடிபெயர்ந்தார். இளம்வயதிலேயே ஏழு முறை கிராமி மியூஸிக் விருது வாங்கியிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் இதழ், உலகின் டாப் 100 முக்கிய மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். 29 வயதான இவருக்கு, பிடித்த உயிரினம் பூனை என்பதால் எப்போதும் பூனையுடன் செல்ஃபி எடுப்பது, வீடியோ எடுப்பது என்று செம்ம சேட்டையாக இருப்பார். மேடையில் பாடும் போட்டோக்களைத் தவிர்த்து, ரகளை செய்யும் போட்டோக்களையே அதிகம் பதிவிட்டதாலோ என்னவோ 16 மில்லியன் பேர்  டெய்லர் ஸ்விஃப்ட்யை ஃபாலோ செய்கின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள 'Taylor Swift - ME!' பாடலை யூடியூபில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்ஸ்டாகிராம் தளம்: Taylor Swift

#9. லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

கால்பந்தின் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் மெஸ்ஸிக்கு வயது 31. அசாத்தியமான பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இவரை இன்ஸ்டாகிராமில் 116 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோ, குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், பார்ட்டி என அவ்வப்போது பதிவிட்டு ஒவ்வொரு முறையும் மில்லியன் லைக்ஸ்க்கு சொந்தக்காரராகி விடுகிறார். இவர், கால்பந்தின் மேல் பெப்ஸி பாட்டிலை வைத்து உதைக்கும் வீடியோவிற்கு மட்டும் 28.2 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் தளம் : Leo Messi

#10. நெய்மர்

நெய்மர்

27 வயதில் கால்பந்து உலகின் இளம் நட்சத்திரமாக விளங்கும் நெய்மருக்கு இன்ஸ்டாவில் 114 மில்லியன் ஃபாலோயர்கள். போட்டியின் புகைப்படங்களை விட, தன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள், மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள், பார்ட்டி, செல்ஃபி என விதவிதமான படங்களைப் பதிவிட்டு லைக்ஸை அள்ளுகிறார். 114 மில்லியன் ஃபாலோயர்களுடன் இருப்பதால் இன்ஸ்ட்டாகிராமில் டாப் பத்து பேரில் 10-வது இடத்தில் இருக்கிறார்.  

இன்ஸ்ட்டாகிராம் தளம் : Neymarjr

இன்ஸ்டாகிராம் டாப் 10 பிரபலங்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்