Published:Updated:

ஆதரவற்ற சடலங்கள்; உறவாக இளைஞர்கள்! 

ஆதரவற்ற சடலங்கள்; உறவாக இளைஞர்கள்! 
ஆதரவற்ற சடலங்கள்; உறவாக இளைஞர்கள்! 

'வாழ்க்கை' மிகப்பெரிய வரப்பிரசாதம். அது எப்போது முடிவு பெறும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. இறந்த பிறகு நாம், இம்மண்ணில் வாழ்ந்த அந்த உடல் மரியாதையுடன் பயணிக்கிறதா? என்பது ஐயமே. ஏனெனில் ஆதரவு இல்லாதவர்களுக்கு கடைசி காரியங்கள் செய்ய, முடிந்ததைக் கொடுக்க இங்கு யாரும் முன்வருவதில்லை. 'பணம் இல்லாமலும், மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தினாலும் இறந்த மகளை தோளில் சுமந்து சென்றார் தந்தை...' என்பதுபோன்ற பல கதைகள் நம் நாட்டில்தான் நடக்கும். மிஞ்சிப்போனால் சமூகவலைத்தளங்களில்இதுபோன்ற செய்திகள் வைரலாக பரவும். ஆனால் அதை சரிசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கை கேள்விக்குறியே!

ஆதரவற்ற சடலங்கள்; உறவாக இளைஞர்கள்! 

உயிரோடு இருக்கும்போது ஒருவரது வாழ்வு எப்படி மதிக்கப்படுகின்றதோ, அதேபோல் ஒருவரின் இறப்பும் மதிக்கப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டே 'உறவுகள் அறக்கட்டளை' செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையை செயல்படுத்திவருவது 18-25 வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்ற சடலங்களை, முறையாக அனுமதி பெற்று இறுதி அஞ்சலியை முடிக்கும் உறவுகள் அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்களில் 80 சதவிகிதம் பேர் கல்லூரி மாணவர்களே!

இதுவரை 250-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை 'உறவுகள்' அடக்கம் செய்துள்ளது. வீடற்றவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், வயோதிகர்கள் மற்றும் சிலர் வீதியிலும், இயற்கை சீற்றங்களாலும் இறக்கின்றனர். சிறு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறப்பதும் உண்டு. இப்படி இறந்தவர்களின் குடும்பம் வறுமையில் வாடும்பட்சத்தில், அவர்களிடமிருந்து ஒரு ரூபாய்கூட பெறாமல் 'உறவுகள் அறக்கட்டளை' இறுதிச் சடங்கு அனைத்தையும் செய்துதருகிறது.

ஊர்விட்டு ஊர்வந்து சிகிச்சை பெறுபவர்கள் இறந்துபோனால், சொந்த ஊருக்குச் செல்ல அவர்களுக்கு அரசு ஆம்புலன்ஸ் வழங்குவதில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களின் நிலையை அறிந்து இந்த அறக்கட்டளை தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறது. மேலும் ஆதரவற்று வீடற்று இருப்பவர்களை காப்பகங்களுக்கு அழைத்துச் செல்லவும் இந்த ஆம்புலன்ஸ் பயன்படுகிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்று இரண்டாவது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் அறக்கட்டளையை இயக்கும் இளைஞர்கள். வெளியூரில் இருந்து பல பேர் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக சென்னை வருவதுண்டு. அவர்களிடம் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு பணம் இருக்காது. இலவசமாக அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க இந்த ஆம்புலன்ஸைப் பயன்படுத்தமுடியும்.

ஆதரவற்ற சடலங்கள்; உறவாக இளைஞர்கள்! 

கடற்கரை, பேருந்து நிலையங்கள், கோவில்கள் என தஞ்சம் அடைந்திருப்பவர்களுக்கு சால்வை, போர்வை போன்றவற்றையும் வழங்கி வருகிறது இந்த அறக்கட்டளை. தவிர அடக்கம் செய்யப்படுவோரின்குழந்தைகளுக்கான படிப்புக்கும் தங்களால் இயன்ற உதவியைச் செய்துவருகிறது.

எளிதில் யாரும் செய்ய முன்வராத ஒரு சேவையினை பெண்களும் சேர்ந்து அறக்கட்டளை வாயிலாக புரிந்து வருகின்றனர். தினந்தோறும் அதிக தேவை இருப்பதால் இந்தச் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டி புதியதோர் அம்புலன்ஸும், அவசர தேவைக்கான உபகரணங்களை வாங்கவும் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இது இரண்டிற்கும் சேர்த்து ரூபாய் 17 லட்சம் தேவையாக இருக்கிறது. டீசல், ஆக்சிஜன், மின்சாரம், அலுவலக வாடகை, அடக்கம் செய்வதற்கான தொகை என இன்னும் ஏராளமான தேவைகளுக்கு மாதத்திற்கு ரூ.55,000ஐ அறக்கட்டளை செலவு செய்கிறது. ஆத்ம திருப்திக்காக சேவைகள் பல செய்தாலும், இவ்வுலகில் பணம் இல்லாமல் எதையும் செய்துவிட முடியாது என்பதே கசப்பான உண்மையாகும். 

இவ்வாறான சேவையில் நம்மால் நேரடியாக ஈடுபட முடியாவிட்டாலும், முன்வந்தவர்களுக்கு நம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவி செய்வோம். நிதி திரட்டும் இணையதளமான 'Edudharma' ஆதரவற்றவர்களுக்கு உறவென நிற்கும் உறவுகள் அறக்கட்டளைக்கு உதவ முன்வந்துள்ளது. 'இவ்வுலகில் ஆதரவற்றவர்கள் என யாருமில்லை என்கிற நிலைமையை உருவாக்க' அனைவரும் ஒன்று சேர்வோம். உறவுகள் அறக்கட்டளைக்கு உறவுகளாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவோம், உதவிக்கரம் நீட்டுவோம்! 

உறவுகள் அறக்கட்டளைக்கு உதவ https://www.edudharma.com/fundraiser/DonateAmbulanceforcancerpatitents - எனும் லிங்கிற்குச் செல்லவும்.

ஆதரவற்ற சடலங்கள்; உறவாக இளைஞர்கள்! 

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.