டெஸ்ட்டிங்கில் BS-6 மஹிந்திரா மராத்ஸோ... AMT வருமா?! | BS-6 Mahindra Marazzo Spotted Testing... Will AMT/ Petrol Engine be there?

வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (08/05/2019)

கடைசி தொடர்பு:10:01 (08/05/2019)

டெஸ்ட்டிங்கில் BS-6 மஹிந்திரா மராத்ஸோ... AMT வருமா?!

``மராத்ஸோவில் பொருத்தப்பட உள்ள பெட்ரோல் இன்ஜின், டீசல் மாடல் போலவே 123bhp பவரை வெளிப்படுத்தும். டீசல் இன்ஜினில் முதலில் AMT அறிமுகப்படுத்தப்படும்''

மராத்ஸோ... மஹிந்திராவின் அமெரிக்க மற்றும் இந்தியப் பொறியாளர்கள் குழு (MNATC & MRV) இணைந்து, மோனோகாக் சேஸி மற்றும் லேடர் ஃப்ரேம் என Hybrid கட்டுமானத்தில் தயாரிக்கப்பட்ட எம்பிவி. சர்வதேசச் சந்தைகளை மனதில்வைத்து தயாரிக்கப்படும் இந்த வாகனத்துக்காக, 33-க்கும் அதிகமான காப்புரிமைகளை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. அதற்கேற்ப, சர்வதேச Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 4 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்று அசத்தியிருந்தது மராத்ஸோ! இதற்கு காரின் சிறப்பான கட்டுமானம் தவிர, பெரும்பான்மையான பாதுகாப்பு வசதிகள் (2 காற்றுப்பைகள், ABS, EBD, பிரேக் அசிஸ்ட், ISOFIX, முன்பக்கப் பயணிக்கான Speed Sensitive Door Lock) அனைத்து வேரியன்ட்களிலும் (M2, M4, M6, M8) ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டதே காரணம். இதனாலேயே விலை அதிகம் என்ற பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், கார் வெளியான முதல் மாதத்திலேயே 10,000 புக்கிங்குகளைக் கடந்துவிட்டது.

மராத்ஸோ

இதன் வெயிட்டிங் பீரியட்டும் கலர்/வேரியன்ட் பொறுத்து நாள்கள் முதல் மாதங்களில் இருக்கிறது. இடையில் இது 20-40 ஆயிரம் ரூபாய் வரையிலான விலை ஏற்றத்தையும் பெற்றது. மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப, மராத்ஸோவின் டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டியும் சேர்க்கப்பட்டது. இந்த எம்பிவி-யின் டாப் வேரியன்ட்டான M8, 8 சீட் ஆப்ஷனுடன் வெளிவந்தது. மஹிந்திராவின் Comprehensive Bodykits மற்றும் ப்ரீமியம் ஆக்ஸசரீஸ் தவிர, DC நிறுவனத்தின் Customisation Package ஆப்ஷனும் உண்டு. ஸ்போர்ட்டியான மற்றும் லக்ஸூரி அம்சங்கள் வேண்டும் என்பவர்களுக்கான சாய்ஸாகத் திகழ்கிறது. ரெனோ லாஜி, மாருதி சுஸூகி எர்டிகா ஆகியவற்றுக்குப் போட்டியாக மராத்ஸோ இருக்கிறது. 

மஹிந்திரா

இந்த எம்பிவி அறிமுகமானபோது, எர்டிகா போல பெட்ரோல் இன்ஜின் மற்றும் காலத்துக்கு ஏற்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லையே என்ற கேள்வி எழுந்தது. இந்த காரின் அறிமுக விழாவில் இதுகுறித்துப் பேசிய மஹிந்திராவின் நிர்வாக இயக்குநரான பவன் கோயங்கா, ``மராத்ஸோவில் பொருத்தப்படவுள்ள பெட்ரோல் இன்ஜின், டீசல் மாடல்போலவே 123bhp பவரை வெளிப்படுத்தும். டீசல் இன்ஜினில் முதலில் AMT அறிமுகப்படுத்தப்படும். பிறகு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கிடைக்கும். இவை எல்லாம் 2020-ம் ஆண்டுக்கான மாடலில் பயன்பாட்டுக்கு வரும்'' என்றார்.

இந்நிலையில் செங்கல்பட்டு அருகே டெஸ்ட்டிங்கில் இருந்த மராத்ஸோவின் BS-6 மாடலைப் படம்பிடித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எம்.அர்ஜுன். சமீபத்தில் நாம் பார்த்த BS-6 XUV3OO-ல் இருக்கும் அதே 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் இதிலும் என்பதால், இது பலரும் எதிர்பார்த்த நிகழ்வுதான்.

எம்பிவி

மாருதி சுஸூகி மற்றும் டாடாவுக்கு AMT-யைத் தயாரிக்கும் இத்தாலியைச் சேர்ந்த Magnetti Marelli நிறுவனம்தான், மராத்ஸோவுக்கும் AMT கியர்பாக்ஸைத் தரும். ஸ்கார்ப்பியோ மற்றும் XUV5OO போன்ற மஹிந்திராவின் எஸ்யூவி-களுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைத் தயாரித்த ஜப்பானிய நிறுவனமான Aisin, இந்த எம்பிவிக்கான டார்க் கன்வர்ட்டர் கியர்பாக்ஸைப் பின்னாளில் வழங்கும். நாசிக்கில் அமைந்திருக்கும் மஹிந்திராவின் தொழிற்சாலையில் மராத்ஸோவின் உற்பத்தி எண்ணிக்கை, 25,000-தைக் கடந்துவிட்டது! சியாஸைத் தொடர்ந்து, தனது புதிய 1.5 லிட்டர் - 4 சிலிண்டர் - DDiS 225 -  டர்போ டீசல் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியை எர்டிகாவில் பொருத்தியுள்ளது மாருதி சுஸூகி. மஹிந்திரா இதற்கு பதிலடியாக மராத்ஸோவின் AMT மாடலை விற்பனைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்