குட்டி யானை ஒதுங்கு... வருது டாடாவின் அடுத்த அட்டாக்! #TataIntra | Tata introduces next commercial compact truck

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:15 (08/05/2019)

குட்டி யானை ஒதுங்கு... வருது டாடாவின் அடுத்த அட்டாக்! #TataIntra

குட்டி யானை டாட்டா ஏஸ்

குட்டி யானை...

Commercial compact truck பிரிவில் இந்தியாவில் மிக முக்கியமான வண்டி குட்டி யானை என்னும் Tata Ace. கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான வண்டிகள் விற்பனையாகி சாதனை படைத்தது, குட்டி யானை. இந்த செக்மென்ட்டில் இனி இன்னொரு மாடல் தேவையில்லையோ என டாடாவே சும்மா இருந்த சமயத்தில் எடுக்கப்பட்டது ஒரு சர்வே. அதன்படி, டாடா ஏஸைவிட கொஞ்சம் கூடுதல் வசதிகளுடன் ஒரு டிரக் தேவை என்ற முடிவுக்குவந்தது டாடா. அதற்காக 4 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்டதுதான், டாடா இன்ட்ரா.

டாடா ஏஸின் டிரைவர் கேபின் கொஞ்சம் சிரமமானது. ஏ.சி கிடையாது. வண்டி பார்க்கவும் சுமாராக இருக்கும். இதுபோன்ற பிரச்னைகளைப் பட்டியலிட்டு, இன்ட்ராசில் சரி செய்திருக்கிறார்கள். கியர் லிவரை டேஷ்போர்டில் மாற்றியதால், அதிக இடம் கிடைத்திருக்கிறது. லோடு அடிக்கும் கேப்பில் தூங்க நினைத்தால், டிரைவர் சீட்டிலே படுத்துத் தூங்கலாம். அதன்படி சீட்டை வடிவமைத்திருக்கிறார்கள். ஏ.சி-யும் கொண்டுவந்திருக்கிறார்கள். பாடி கலரிலே பம்ப்பர், டாடாவின் க்ரோம் ப்ளேட், என் முன்னாலிருந்து பார்த்தால் பேஸஞ்சர் கார் போன்ற லுக் கொடுத்திருக்கிறார்கள்.

அதிக லோடு தாங்கும், வேகமாகப் போகும். இதனால், கூடுதலாகும் EMI பணத்தை இன்ட்ராவே சம்பாதித்துக் கொடுக்கும் என்கிறது டாடா. இதன் விலை மற்று பிற வசதிகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடும் என்கிறது டாடா. இந்த மாத இறுதியில் வெளியாகவிருக்கும் இன்ட்ரா பற்றிய முழுமையான ரிவ்யூ, ஜூன் மாத மோட்டார் விகடனில் வெளியாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க