'ஆக்சிஜன் குடுவைகள், பீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள்' - எவரெஸ்ட்டில் அகற்றப்பட்ட 5 டன் குப்பைகள் | 5-ton garbage collected from Mount Everest

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/05/2019)

கடைசி தொடர்பு:20:22 (09/05/2019)

'ஆக்சிஜன் குடுவைகள், பீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள்' - எவரெஸ்ட்டில் அகற்றப்பட்ட 5 டன் குப்பைகள்

எவரெஸ்ட்

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 டன் கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. கடந்த மாதம் 14-ம் தேதி இந்தக் கழிவுகள் சேகரிக்கும் பணியை நேபாளம் தொடங்கியது. மலையேற்றம் செய்வதற்காக உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் எவரெஸ்ட்டை நோக்கிப் படையெடுக்கிறார்கள். சிகரத்தை நோக்கி மேலே ஏறும்போது அன்றாடத் தேவைகளுக்காகப் பல கிலோ எடை கொண்ட பொருள்களை மேலே கொண்டு செல்ல வேண்டியிருக்கும். மலையேறுபவர்கள் அந்தப் பொருள்களைப் பயன்படுத்திவிட்டு அங்கேயே போட்டுவிடுகிறார்கள். தேவை முடிந்தவுடன் அவை கழிவுகளாக மாறிவிடுகின்றன. இதுபோல அங்கே ஒவ்வொரு வருடமும் பல டன் அளவுக்குக் குப்பைகள் குவிகின்றன.

பேஸ் கேம்ப்

இப்படிச் சேரும் குப்பைகளால் உலகின் உயரமான குப்பைத் தொட்டி என்ற பெயரையும் எவரெஸ்ட் ஏற்கெனவே பெற்றுவிட்டது. குப்பைகளின் அளவைக் குறைக்கும் வகையில் 2014-ம் ஆண்டில் நேபாள அரசு மலையேறுபவர்கள் திரும்பி வரும்போது கட்டாயம் 8 கிலோ அளவுக்குக் குப்பைகளை எடுத்து வர வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்தியது. இருந்தபோதிலும் மேலே இருக்கும் குப்பைகளை அகற்ற நேபாள அரசு முயற்சி செய்து வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி நேபாளப் புத்தாண்டைத் தொடர்ந்து 10 டன் அளவுக்குக் குப்பைகளைச் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணி வரும் ஜூன் மாதத் தொடக்கம் வரை நடைபெறவுள்ளது. 23 மில்லியன் நேபாள ரூபாய் இதற்கான நிதியாக ஒதுக்கப்பட்டது.

நேபாளம்

மலையில் சேகரிக்கப்படும் இவற்றைக் கீழே கொண்டு வர ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. இது வரை 5 டன் அளவுக்குக் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக பொது இயக்குநர் டண்டு ராஜ் கிமிரே (Dandu Raj Ghimire) தெரிவித்திருக்கிறார். காலியான ஆக்சிஜன் குடுவைகள், சமையல் கழிவுகள், பீர் பாட்டில்கள் மற்றும் மனிதக் கழிவுகள் எனப் பல்வேறு வகையான குப்பைகள் இதில் அடக்கம்