ரசிகர்களுக்கு ஐஸ்க்ரீம் வழங்கிப் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் தேவரகொண்டா! | Vijay Devarakonda celebrates his birthday with his fan by distributing ice creams

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (09/05/2019)

கடைசி தொடர்பு:21:25 (09/05/2019)

ரசிகர்களுக்கு ஐஸ்க்ரீம் வழங்கிப் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் தேவரகொண்டா!

`க்ரீம் ஸ்டோன்' ஐஸ்க்ரீம் நிறுவனத்தோடு இணைந்து தன் ரசிகர்களுக்கு ஐஸ்க்ரீம் வழங்கி, கோலாகலமாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

சிறு வயதில், நண்பர்களுக்கு இனிப்புப் பலகாரங்களைப் பகிர்ந்து தன் பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கம் கொண்ட இவர், இந்த ஆண்டு தன் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட முடிவு செய்திருந்தார். அதனால், 'Deverakonda Birthday Truck' எனும் ஐஸ்க்ரீம் வண்டியைத் தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களில் திறந்து, ஆயிரக்கணக்கான ஐஸ்க்ரீம்களை ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டாடியுள்ளார்.

விஜய்தேவரகொண்டா

`நீங்கள் எனக்கு அதிகப்படியான அன்பைக் கொடுத்திருக்கிறீர்கள். நான் இந்த நாளை உங்களோடு இணைந்து கொண்டாட விரும்பினேன். அன்பையும் புன்னகையையும் அதிகமாகப் பகிருங்கள்" என்று கூறி, சென்னை அண்ணா நகரிலுள்ள அண்ணா ஆதர்ஷ் கல்லூரி வளாகத்தின் அருகே 'Mr.Alphonso' ஐஸ்க்ரீம் வகையை ரசிகர்களுக்கு வழங்கினார் `ரவுடி'. மேலும், கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களிலும் ஐஸ்க்ரீம்கள் வழங்கப்பட்டன.