``குழந்தைக்காக பிரேக் எடுத்திருந்தேன், சீக்கிரம் ரீ என்ட்ரி கொடுப்பேன்!'' - `தெய்வமகள்' சுனிதா | serial actress sunitha talks about her personal

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (10/05/2019)

கடைசி தொடர்பு:15:30 (10/05/2019)

``குழந்தைக்காக பிரேக் எடுத்திருந்தேன், சீக்கிரம் ரீ என்ட்ரி கொடுப்பேன்!'' - `தெய்வமகள்' சுனிதா

'தெய்வமகள்' சீரியலில் `சுஜாதா' கதாபாத்திரத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை சுனிதா. தெய்வமகள் சீரியலைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் `சுமங்கலி' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குழந்தைப் பேறுக்காக நடிப்புக்கு பிரேக் எடுத்தவர் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள பேசினோம்.

சுனிதா

`தெய்வமகள்' சீரியலில் பாசமான மனைவியா நடிச்சிருந்தேன். அந்த சீரியல் எனக்குன்னு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. அதைத் தொடர்ந்து `சுமங்கலி' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தேன். இந்த சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போது கர்ப்பமானதால சீரியலுக்கு பிரேக் எடுக்க வேண்டியிருந்தது. இப்போ `எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்காங்க. இப்போ அவங்க பதினோரு மாசக் குழந்தை. அவங்களுடைய பெயர் ருத்வி. ருத்வின்னா ஏஞ்சல்னு அர்த்தம். பாஸிட்டிவ், நெகட்டிவ்னு நடிச்சிட்டு இருந்தேன். குழந்தைக்காக சில நாள்கள் நடிப்புக்கு பிரேக் எடுத்திருந்தேன். இப்போ மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்க தயார்! நல்ல கதாபாத்திரத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே கண்டிப்பா என்னை சின்னத்திரையில் சந்திக்கலாம் எனப் புன்னகைக்கிறார் சுனிதா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க