`சும்மா காமெடி பண்ணாதீங்க ஜெஃப்'- அமேசான் நிறுவனரைக் கலாய்க்கும் எலான் மஸ்க் | Elon Musk teasing Blue Origin Founder Jeff Bezos

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (10/05/2019)

கடைசி தொடர்பு:17:50 (10/05/2019)

`சும்மா காமெடி பண்ணாதீங்க ஜெஃப்'- அமேசான் நிறுவனரைக் கலாய்க்கும் எலான் மஸ்க்

ஜெஃப் பெஸாஸ்

அமெரிக்காவில் அரசுக்குச் சொந்தமான நாசா மட்டுமன்றி பல்வேறு தனியார் அமைப்புகளும் விண்வெளித் துறையில் ஈடுபாடு காட்டி வருகின்றன. அதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் விண்வெளிப் பயணம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைக்கு ஜெஃப் பெஸாஸ் நிலவில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ப்ளூ மூன் லேண்டர் (Blue Moon lunar lander) என்ற விண்கலத்தை நேற்றைக்கு நியூயார்க்கில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதை கடந்த மூன்று வருடங்களாக ப்ளூ ஆர்ஜின் இதை வடிவமைத்து வந்தது. இதன் மூலமாக மனிதர்கள் நிலவுக்குப் பயணம் செய்ய முடியும். ``இது நிலவுக்குச் செல்லும் ஒரு அற்புதமான விண்கலம் " என ஜெஃப் பெஸாஸ் நேற்று தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்க்

ட்விட்டரில் அவரைக் கிண்டலடித்திருக்கிறார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க். தி நியூடயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையதளத்தில் ப்ளூ மூன் லேண்டர் தொடர்பாக வெளியான செய்தியை இணைத்து `போதும், கேலி செய்வதை நிறுத்துங்கள் ஜெஃப்' என அவரது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.