பல டிசைனர்ஸ், வார்ட்ரோப் புது டிரஸ், சமந்தா இன்டோ-வெஸ்டர்ன் டிரஸ் - வீஜே சித்ராவின் ஃபேஷன் பக்கம் | VJ Chitra talks about her fashion

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (11/05/2019)

கடைசி தொடர்பு:16:07 (11/05/2019)

பல டிசைனர்ஸ், வார்ட்ரோப் புது டிரஸ், சமந்தா இன்டோ-வெஸ்டர்ன் டிரஸ் - வீஜே சித்ராவின் ஃபேஷன் பக்கம்

பல டிசைனர்ஸ், வார்ட்ரோப் புது டிரஸ், சமந்தா இன்டோ-வெஸ்டர்ன் டிரஸ் - வீஜே சித்ராவின் ஃபேஷன் பக்கம்

மீடியாவில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சீரியல்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருப்பவர் வீ.ஜே சித்ரா. கலகல பேச்சுக்கு சொந்தக்காரியின் உடை தேர்வு ரசனையாக இருக்கிறது. அவரிடமே அதைப் பற்றி கேட்டோம்.

ஆடைத்தேர்வு:

சித்ரா

"என்னுடைய டிரஸ் யூனிக்கா இருக்கணும்னுதான் எப்போதும் விரும்புவேன். ஒரே ஆள் கிட்ட போகாம... நிறைய டிரஸ் டிசைனர்களை எனக்கு டிசைன் பண்ணி தர சொல்லுவேன். புதுசா ஒரு உடையை போட்டுகிட்டு கண்ணாடி முன்னாடி நம்மளை நாமளே ரசிக்குற அந்த தருணம்தான் பெஸ்ட். ஆக்சுவலா அப்படி அணிஞ்சுட்டு போறப்ப நீங்க நிறைய கமெண்ட்ஸ்களை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனா அந்த ஆடை டிரெண்ட் ஆச்சுனா... நீங்கதான் டிரெண்ட் செட்டர்! எனக்கு டிரெடிஷனல் டிரஸ்னா அவ்வளவு கிரேஸ். சேலை வித்தியாசமான காம்பினேஷன்ல இருந்தா உடனே பில் போட சொல்லீருவேன்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மிடில் கிளாஸ் குடும்ப பொண்ணு கேரக்ட்டர் என்பதால் காட்டன் புடவைகள், எல்போ ஸ்லீவ் ப்ளவுஸ் என்பதை ஃபிக்ஸ் செய்துகிட்டேன்.

அக்ஸசரீஸ்: 

நகை

எனக்கு ஹேண்ட் பேக்குகள் என்றால் கொள்ளைப்பிரியம் எல்லா பிராண்ட் ஹேண்ட் பேக்குகளும் இருக்கு. ஷாப்பிங் போனாலே புதுசா ஒரு ஹேண்ட் பேக்குடன்தான் வீட்டுக்கு வருவேன். ஜூவல்லரிகளைப் பொறுத்தவரை நெக்பீஸ் அதிகம் பயன்படுத்தமாட்டேன். வித்தியாசமான லாங் கம்மல்கள் அணியவும், நெத்திசுட்டி வெச்சு நடுவகிடு எடுத்துத் தலைவாரிக்கொள்ளவும் பிடிக்கும். சிம்பிள் நெத்திசுட்டி, ஹெவி நெத்திச்சுட்டி என நெத்திசுட்டியிலும் நிறைய வெரைட்டி வைச்சிருக்கேன்.

ஷாப்பிங்:

மனசுக்கு ரொம்ப பிடிச்சமான விஷயம் ஷாப்பிங். யூனிக்கான பொருள்களைத் தேடித்தேடி வாங்குவேன். எந்தப் பொருளையும் தேர்வு செய்ய அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன். ஷாப்பிங் பண்ணும் போது விலையும் முக்கியம். எந்தப் பொருளையும் அதன் தரத்தைவிட அதிக காசு கொடுத்து வாங்க எனக்குப்பிடிக்காது. அதனால் ஒரு கடைக்கு ரெண்டு கடை ஏறி இறங்கிதான் வாங்குவேன். காஸ்டியூமை பொறுத்தவரை ஈவென்டுகளுக்கு தகுந்தாற் போல் டிசைனர்களிடம் ரெடி பண்ண சொல்லிருவேன். சில ஈவென்ட் கடைசி நேரத்தில் கமிட் ஆகும் என்பதால் என்னுடைய வார்ட்ரோப்பில் எப்போதும் சில புது டிரஸ்கள் ரெடியா இருக்கும். கேஷ்வல் லுக் டிரஸ்களைப் பொறுத்தவரை எப்போதெல்லாம் தேவைப்படுதோ அப்போதெல்லாம் ஷாப்பிங்தான்.

நிறத்தேர்வு:

நிறம்

எனக்கு பிங்க் நிறம் ரொம்பப் பிடிக்கும். ஆனால் ஒரே மாதிரியான நிற ஆடைகளை எல்லா இடங்களுக்கும் அணிந்து கொள்ளமுடியாது என்பதால் என்னுடைய வார்ட்ரோப்பில் எல்லா நிற ஆடைகளும் மிக்ஸ் ஆகிதான் இருக்கும். சீரியல் என்றால் எபிசோடுகளுக்கு தகுந்தாற் போலும் நிகழ்ச்சிகள் எனில் நிகழ்ச்சி நடைபெறும் இடம், பார்வையாளர்களைப் பொருத்தும் நிறங்களைத் தேர்வு செய்வேன்.

ஆன்லைன் ஷாப்பிங்:

ஷாப்பிங்

ஆப்கள் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் பண்றது எனக்குப் பிடிக்காது. அதற்குப் பதிலாக இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாவில் பொருள்களை விற்கும் பெண்களிடம் ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுவது உண்டு. ஹேண்ட் மேட் ஜூவல்லரிகள், புடவைகள், மெட்டீரியல்கள் போன்றவற்றை ஆன்லைன் மூலம் வாங்குவேன்.

ஃபேவரைட்:

சமந்தா மேடத்துடைய டிரஸ்சிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க தேர்வு செய்யும் இண்டோ-வெஸ்டர்ன் டிரஸ்கள் எல்லாமே வேற லெவலில் இருக்கும். அவங்களை மாதிரி டிரஸ் பண்ணிக்க அடிக்கடி டிரை பண்ணுவேன்.

மெமரபிள் டிரஸ்: 

நான் முதல்முதலாக ஆங்கரிங் பண்ணும் போது கட்டி இருந்த சிவப்பு நிற புடவைதான் என்னால எப்பவும் மறக்கமுடியாத டிரஸ். ரொம்ப லக்கியான டிரஸ்ஸும் கூட். என்னுடைய வார்ட்ரோப் முழுவதும் ஆடைகள் நிறைந்து இருந்தாலும். அந்தப் புடவை எப்போதும் சம்திங் ஸ்பெஷலானது.

மேக்கப்:

சித்ரா

மேக்கப் விஷயத்தில் எப்போதும் ரொம்ப கவனமாக இருப்பேன். எல்லா பிராண்ட்லையும் மேக்கப் பொருள்கள் என்னிடம் இருக்கு. சம்மரில் வெளியே செல்லும் போது, வீட்டில் இருக்கும் போது, சீரியலுக்கு, ஈவெண்டுக்கு எனச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மேக்கப் செய்துகொள்வேன். கண்கள் சார்ந்த மேக்கப்பில் அதிக கவனம் செலுத்துவேன்."


டிரெண்டிங் @ விகடன்