நம்புங்க... இவையெல்லாம் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்ஸ்! #VikatanInfographics | The Global Top 10 iPhone & android Apps

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (13/05/2019)

கடைசி தொடர்பு:16:12 (13/05/2019)

நம்புங்க... இவையெல்லாம் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்ஸ்! #VikatanInfographics

கூகுள் ப்ளே ஸ்டோரில் உலகம் முழுவதும் கடந்த 2018-ல் மட்டும் 205.4 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 258.2 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்புங்க... இவையெல்லாம் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்ஸ்! #VikatanInfographics

ளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகுக்கு ஏற்றவாறு, குறுகிய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் சிறப்பான உயரத்தை எட்டியுள்ளன. அதேபோல் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களுடன் வெளிவந்த ஐபோன்களும் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. மற்றவர்களுடன் பேச வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது பேசுவதோடு மட்டுமன்றி அனைத்துக்கும் பயன்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்குக்காக மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கான ஆப்ஸ் ப்ளே ஸ்டோர் மற்றும் ஐஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஆப்ஸ்

கூகுள் ப்ளே ஸ்டோரில் உலகம் முழுவதும் கடந்த 2018-ல் மட்டும் 205.4 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 258.2 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் மட்டும் 2017-ல் 12.1 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் இந்த எண்ணிக்கை 37.2 பில்லியனாக இருக்கலாம். உலகளவில் சீனாவில்தான் அதிகளவில் ஆப்ஸ் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. 2017-ல் மட்டும் 79.3 பில்லியன் ஆப்ஸ் தரவிறக்கம் செய்துள்ளனர். உலகளவில் அதிக ஆப்ஸ் தரவிறக்கம் செய்வதில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

Apps

உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால், முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப்தான். உலகம் முழுவதும் 75.81 மில்லியன் பேர் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர். இரண்டாவது இடத்தில் ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளது. இதை 50.3 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து, ஃபேஸ்புக் லைட்டை 27.7 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். சமீபத்தில் பேசுபொருளான டிக்டாக்கை உலகம் முழுவதும் 26.17 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். அதேபோல், கேம்களில் ஸ்டேக் பால் (Stack ball - blast through platforms), ரன் ரேஸ் 3D (run race 3D), கரேனா ஃப்ரீ ஃபயர் (Garena free fire ), கலர் பம்ப் 3D (color bump 3D), ட்விஸ்ட் ஹிட் (Twist hit), ஹோம்ஸ்கேப்ஸ் (Homescapes) போன்றவை அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 10 ஆண்ட்ராய்டு ஆப்ஸ் பட்டியலில் உள்ளன. நம்மில் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல ஆப்ஸ்தான் டாப் 10 பட்டியலில் இருக்கும் என நினைப்போம். ஆனால், அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் இருக்கின்றன கேமிங் ஆப்ஸ்.

அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஐஓஎஸ் ஆப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது க்ளீன் ரோடு (Clean Road) கேம்தான். இதை 11.18 மில்லியன் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரன் ரேஸ் 3D (run race 3D)-யை 9.75 பேரும், அமேஸ் (Amaze) ஆப்ஸை 9.73 மில்லியன் பேரும் தரவிறக்கம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ரோலர் ஸ்ப்லாட் (Roller Splat), வாட்ஸ்அப் (Whatsapp), ஸ்டேக் பால் 3D (Stack ball 3D), மிஸ்டர்.புல்லட் - ஸ்பை புதிர்கள் (Mr.Bullet - Spy Puzzles), டைல்ஸ் ஹப் - EDM ரஷ் (Tiles Hop - EDM Rush), மெசஞ்சர் (messenger), ஃபேஸ்புக் (Facebook) போன்றவை அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 

ஐபோன் ஆப்ஸ்

ஆண்ட்ராய்டு போனைக் காட்டிலும், ஐபோனில்தான் அதிக கேம்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன. ப்ளே ஸ்டோரில் சில முக்கிய செயலிகளைப் பயன்படுத்தப் பணம் செலுத்தித்தான் தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்தியர்கள் பெரும்பாலும் இலவசமாக இருக்கும் செயலிகளை மட்டுமே தரவிறக்கம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்