விற்பனைக்கு வந்துவிட்டது இந்தியாவின் முதல் FI ஸ்கூட்டர்... ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125! | Hero maestro edge 125 and Hero Pleasure plus launched in India

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (13/05/2019)

கடைசி தொடர்பு:18:58 (13/05/2019)

விற்பனைக்கு வந்துவிட்டது இந்தியாவின் முதல் FI ஸ்கூட்டர்... ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் அளவான மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய பிளெஷர் மாடல் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதனோடு, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரும் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹீரோ பிளெஷர் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஸ் 125 ஸ்கூட்டர்கள்

புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125

புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125, கார்புரேட்டர்-டிரம் பிரேக், கார்புரேட்டர்-டிஸ்க் பிரேக் மற்றும் FI என மூன்று வேரியன்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற பெட்ரோல் கேப், டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு ஸ்டாண்டு  மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர்களுடன், சீட்டுக்கு அடியில் USB சார்ஜிங் பாயின்ட், ஹீரோவின் i3s இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் டெக்னாலஜி எனப் பல சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும், இதன் இன்ஜின் ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான். இது 8.83bhp பவர் மற்றும் 10.2 NM டார்க்கை வெளிப்படுத்துகிறது. Fi வேரியன்ட் மூலம் இந்தியாவில் முதல் Fi ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் களமிறங்கியுள்ளது. Fi வேரியன்ட் 9.2bhp பவர் மற்றும் 10.2 NM டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது கார்புரேட்டர் வேரியன்டின் பெர்ஃபாமென்ஸை விட அதிகம். டிவிஎஸ் NTORQ 125, ஹோண்டா கிரேஸியா, சுஸுக்கி அக்சஸ் 125 போன்ற ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது மேஸ்ட்ரோ எட்ஜ் 125. 

New Maestro edge 125

புதிய பிளெஷர் பிளஸ் 

பெண்களுக்கான ஸ்கூட்டராக ஹீரோவால் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் பிளெஷர். பல ஆண்டு காலமாய் விற்பனையில் இருக்கும் பிளெஷரின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது ஹீரோ. பிளெஷர் ஸ்கூட்டரை தோற்றத்தில், இன்ஜினில், வசதிகளில் என அனைத்திலும் நவீனமாக்கி பிளெஷர் பிளஸ் எனும் புதிய பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ஹீரோ. பிளெஷர் ப்ளஸ்ஸில் 102 சிசி இன்ஜினுக்கு பதிலாக டூயட்/ மேஸ்ட்ரோ எட்ஜ் 110-ல் உள்ள 110.9 சிசி இன்ஜினை கொண்டு வந்துள்ளார்கள். முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்கின் டிஸைனை முற்றிலும் மாற்றிவிட்டார்கள். முன்பக்கம் சில்வர் லைனிங்கும், பக்கவாட்டில் பாடி கலர் பேனல் போன்றவற்றைக் கொண்டுவந்து ஸ்டைலைக் கூட்டியுள்ளார்கள். சாதாரண ஹீட் மெட்டல் வீல் மற்றும் அலாய் வீல் என இரண்டு வேரியன்ட்டுகளில் பிளெஷர் ப்ளஸ் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டர் 8.1bhp பவர் மற்றும் 8.7 NM டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதன் எடையும் 101 கிலோதான். புதிய பிளெஷர் ப்ளஸ் ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் ஜெஸ்ட், ஹோண்டா டியோ, யமஹா ரே போன்ற ஸ்கூட்டடர்களோடு போட்டிக்கு வந்துள்ளது. 

Hero pleasure 125

விலை என்ன?

புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125, கார்புரேட்டர்-டிரம் பிரேக் ரூ.58,500; கார்புரேட்டர்-டிஸ்க் பிரேக் ரூ.60,000 மற்றும் FI ரூ.62,700 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. பிலெஷர் பிளஸ் முந்தைய பிளெஷரை விட ரூ.2,200 கூடுதல் விலையில், ரூ.47,300 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹீரோ

ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்கள் டிசைனிலும் சிறப்பம்சங்களில் முன்னேற்றத்தைக் கண்டுள்ள நிலையில் இந்த ஸ்கூட்டர்கள் ஜூன் முதல் வாரத்துக்குள் ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்று ஹீரோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்