உலகின் மகிழ்ச்சியான நாடுகள்... 140-வது இடத்தில் இந்தியா! #VikatanInfographics | World Happiest Country List... India got 140th Place

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (13/05/2019)

கடைசி தொடர்பு:17:30 (13/05/2019)

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்... 140-வது இடத்தில் இந்தியா! #VikatanInfographics

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்... 140-வது இடத்தில் இந்தியா! #VikatanInfographics

உலகில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் மார்ச் 20–ம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. 2012–ம் ஆண்டு மார்ச்-20-ம் தேதியிலிருந்து `உலக மகிழ்ச்சி தினம்` கொண்டாடப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், உலகம் முழுவதும் 156 நாடுகளில் வாழும் மக்கள், அந்த நாட்டில் எந்த அளவு சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதை பல்வேறு காரணிகளை வைத்து மதிப்பீடுசெய்து, ஆண்டுதோறும் பட்டியலை வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் விவரம்...

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில்

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்து இரண்டாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. 

கடந்த ஆண்டு 14-வது இடத்திலிருந்த அமெரிக்கா, இந்தமுறை 19-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு 133-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 7 இடத்தில் பின்தங்கி 140-வது இடத்தைப் பிடித்துள்ளது. எதிர்மறையான எண்ணங்களும், உதவி செய்யும் மனப்பான்மை குறைந்ததும், இந்தியா இந்தப் பட்டியலில் பின்தங்கியதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் எதுவும் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை. அமெரிக்கா 19-வது இடத்தையும், யுனைட்டெட் கிங்டம் 15-வது இடத்தையும், ரஷ்யா 68-வது இடத்தையும், சீனா 93-வது இடத்தையும், ஜப்பான் 58-வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான்  67-வது இடத்தில் உள்ளது.