ரத்த வங்கிகளை கணினிமயமாக்கும் முடிவு - தமிழக சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடு! | Allocate funds for computerisation of blood banks

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/05/2019)

கடைசி தொடர்பு:17:36 (13/05/2019)

ரத்த வங்கிகளை கணினிமயமாக்கும் முடிவு - தமிழக சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடு!

மிழகத்தில் இயங்கும் 89 அரசு ரத்த வங்கிகளை கணினிமயமாக்கத் தமிழக சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

ரத்த வங்கி

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றியது, கெட்டுப்போன ரத்தத்தை கர்ப்பிணிகளுக்கு ஏற்றியது என அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றுதல் தொடர்பாக பல குளறுபடிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இந்தக் குளறுபடிகளால் உயிரிழப்புகளும் வாழ்நாள் முழுவதும் ஹெச்.ஐ.வி. பாதிப்பைச் சுமந்து திரிய வேண்டியதுமாய், அதனால் உண்டான பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. அது, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், மருத்துவச் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. 

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ரத்தவங்கிகளை முறைப்படுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலுள்ள 89 அரசு ரத்தவங்கிகளை முழுவதும் கணினிமயமாக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஒரு வங்கிக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

ரத்தம்

அதன்படி,மனிதத் தவறுகளுக்கு இடமில்லாத வகையில் `டேட்டா லாக்கர்' எனும் கணினி முறைக்கு மாற்றப்படுகின்றன. இந்த டேட்டா லாக்கரில் ரத்த யூனிட்டுகளை உரிய வெப்பநிலையில் பராமரிக்கும் வசதியும் தொடர்ந்து அவற்றைக் கண்காணிக்கும் வசதியும் உள்ளது. ரத்த யூனிட்டுகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக அலாரம் அடிக்கும் வசதியும் அதில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க