சைபர் தாக்குதல் அபாயத்தில் இந்திய நிறுவனங்கள்!  | 69% Indian firms face serious cyber attack risk: Study 

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (13/05/2019)

கடைசி தொடர்பு:20:10 (13/05/2019)

சைபர் தாக்குதல் அபாயத்தில் இந்திய நிறுவனங்கள்! 

இந்தியாவில் உள்ள 69 சதவிகித  நிறுவனங்கள், சைபர் தாக்குதல் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ந்தியாவில் உள்ள 69 சதவிகித  நிறுவனங்கள் சைபர் தாக்குதல் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சைபர் தாக்குதல்

ஃப்ரோஸ்ட் & சுல்லிவன் என்ற முன்னணி ஐடி பகுப்பாய்வு நிறுவனம், இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 83 சதவிகித நிறுவனங்கள், புராஜெக்ட்டுகளை டிஜிட்டல் மூலம் மாற்றும்போது, சைபர் பாதுகாப்பு தொடர்பாக சிந்திப்பதே இல்லை எனத் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வில், ஆசிய பசிபிக்  பிராந்தியத்தில் உள்ள இந்தியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தலா 100 வீதம்,  400-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கெடுத்தன. குறிப்பாக நிதிச் சேவைகள், டெலிகாம், உற்பத்தித் துறை, எரிசக்தி மற்றும் பயன்பாடுகள், சில்லறை விற்பனைத் துறை, கல்வி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்தியாவைப் பொறுத்தமட்டில், 69 சதவிகித நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் 63 சதவிகித நிறுவனங்கள் இத்தகைய அபாயத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும், இங்கு 35 சதவிகித நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது சைபர் தாக்குதலை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

பெரும்பாலான ஆசிய பசிபிக் நிறுவனங்கள் (72 சதவிகிதம்), சைபர் தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சோதனைசெய்துகொள்கிறபோதிலும், 55 சதவிகித நிறுவனங்கள் தொடர்ந்து சைபர் தாக்குதல் அபாயத்துக்குள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

ஆய்வில் 400 நிறுவனங்கள் பங்கெடுப்பு

ஆய்வில் பங்கேற்று கருத்து தெரிவித்த நிறுவனங்களில் 53 சதவிகிதம் பெரிய நிறுவனங்கள். மீதமுள்ளவை நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் ஆகும். நிறுவனங்கள் சார்பாக கருத்து தெரிவித்தவர்களில் 75 சதவிகிதம் பேர், சி லெவல் எக்ஸிகியூட்டிவ்ஸ்,  ஐடி துறை மூத்த அதிகாரிகள் மற்றும் நிறுவன பாதுகாப்புகுறித்து முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க