Published:Updated:

`மோடி இத்தனை பொய்களைச் சொல்லியிருக்கிறார்!' - வருடவாரியாகப் பட்டியலிடும் இணையதளம்

'ரேடார்' என்ற ஒற்றை வார்த்தை மூலமாக இந்தியா முழுவதும் இந்த வாரம் டிரெண்டிங்கில் இருக்கிறார் பிரதமர் மோடி. போர் விமானங்களை ரேடார்களின் பார்வையிலிருந்து மேகங்கள் தவிர்க்க உதவும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் மோடி. அவ்வளவுதான் சமூக வலைதளங்களில் அவர் சொன்னதைப் பிரித்து மேய்ந்துவிட்டர்கள். அதோடு நிற்காமல் 1987-88-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தியதாகவும், அதன் மூலமாக எடுக்கப்பட்ட போட்டோவை அத்வானிக்கு இ-மெயில் மூலமாக அனுப்பியதாகவும் அதே பேட்டியில் தெரிவித்திருந்தார். ஓ இது வேற இருக்கா ! என்ற நெட்டிசன்கள் அதையும் அடித்துத் துவைத்தார்கள்.

`மோடி இத்தனை பொய்களைச் சொல்லியிருக்கிறார்!' - வருடவாரியாகப் பட்டியலிடும் இணையதளம்

அந்த ஒரே ஒரு பேட்டியின் மூலமாகப் பிரதமர் மோடி எதற்காகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிடுகிறார் என்ற உண்மையும் ஊருக்குத் தெரிந்து போனது. இப்படிக் கடந்த சில வருடங்களில் அவர் கூறிய தவறான தகவல்களைத் தொகுத்திருக்கிறது https://www.modilies.in/ என்ற இணையதளம். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி அண்மை வரையில் மோடி தெரிவித்த பொய்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. மேலும், அவற்றை வெறும் பட்டியலாக மட்டுமே கொடுக்காமல் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஆதாரங்களையும் இந்த இணையதளத்தில் இணைத்திருக்கிறார்கள்.  

Vikatan