'நாய்களுக்கு இந்தப் பெயரா..?' சீனாவில் கைதான வாலிபர்! | Police arrests Chinese man for naming dogs with these names!

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (15/05/2019)

கடைசி தொடர்பு:20:51 (15/05/2019)

'நாய்களுக்கு இந்தப் பெயரா..?' சீனாவில் கைதான வாலிபர்!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் நாய்களுக்குப் பெயர் வைத்ததற்காகக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்படி என்ன பெயர் வைத்தார் என்று கேட்கிறீர்களா. `Chengguan, Xieguan' என்பதுதான் அந்தப் பெயர்கள். இது அங்குள்ள சட்டம் ஒழுங்கு அதிகாரிகளைக் குறிக்கும் சொற்கள். `Chengguan' என்றால் நகர்ப்புறங்களில் சிறிய குற்றங்களைக் கண்காணிப்பவர்களைக் குறிக்கும். `Xieguan' என்றால் டிராஃபிக் அதிகாரிகள் போன்றவர்களைக் குறிக்கும். நாய்களுக்கு இப்படிப் பெயர் வைத்த பேன் என்னும் வாலிபர், இதைப் பற்றி சீனாவின் பிரபல மொபைல் மெசேஞ்சரான WeChat-ல் இதுகுறித்து பதிவிட, இது காவல்துறையின் பார்வையை எட்டியுள்ளது.

பெயர் வைக்கப்பட்ட நாய்

P.C: BEIJING NEWS

அவர்கள் உடனடியாக இதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். சட்டம் ஒழுங்கு அதிகாரிகளை இழிவுபடுத்துவதாக அவர்மேல் வழக்கு தொடரப்பட்டது. இப்போது 10 நாள்கள் சிறப்புக் காவலில் இருக்க வேண்டும் என்ற தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெய்ஜிங் நியூஸிடம் பேசிய பேன், ``இது சட்டப்படி தவறு என்று எனக்குத் தெரியாது, நான் ஜாலியாகத்தான் அப்படிச் செய்தேன்" என்றார்.

கைதான வாலிபர்

P.C: YINGZHOU POLICE

இந்த நடவடிக்கை குறித்து அங்குள்ள சமூக வலைதளங்களில் சிலர் 'அவர் வேண்டுமென்றே வம்பை வாங்கிக்கொண்டார்', 'நாய்களை இப்படி அழைக்கக் கூடாது என்று எங்கு சட்டம் இருக்கிறது' என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க