ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி... வைரலாகும் வீடியோ! | Baby elephant rescued from a lake- Viral Video

வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (16/05/2019)

கடைசி தொடர்பு:20:38 (16/05/2019)

ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி... வைரலாகும் வீடியோ!

அஸ்ஸாமின் தேசியப் பேரிடர் குழுவும், மாநில வனத்துறை அதிகாரிகளும் சேர்ந்து ஏரியில் விழுந்த யானைக் குட்டியை மீட்கும் வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. இது கடந்த வாரம் கவுகாத்தியின் கசிரங்க தேசியப் பூங்கா அருகில் இருக்கும் கம்ருப் மாவட்டத்தின் தீப்போர் பீல் ஏரியில் நடந்தது. 

ஏரியில் யானை

முதலில் அங்குள்ள உள்ளூர் மக்கள் இப்படிக் குட்டி யானை ஏரியில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வனத்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். வனத்துறையும் உடனடியாக ஏரிக்கு வந்து சிறிய படகுகளின் உதவியுடன் மீட்டுள்ளனர். தாயுடன் ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது தவறி ஏரியில் இது விழுந்திருக்கவேண்டும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் அதிகமான ஆகாயத் தாமரைகள் இருந்தது சற்றே நிலைமையை மீட்புகுழுக்குச் சிக்கலாக்கியது, இருப்பினும் வனத்துறை குட்டி ஏரியிலிருந்து வெளியே கொண்டுவந்து அங்கிருந்து பத்திரமாக தாயிடம் கொண்டுசேர்த்தது .

 

 

அஸ்ஸாம் மிருகக்காட்சி பிரிவின் வனத்துறை அதிகாரி தேஜாஸ் மரிஷ்வமி ``குட்டியை மீண்டும் தாயிடம் சேர்ப்பதுதான் எங்கள் அதிகாரிகளின் முன்னுரிமையாக இருந்தது" என்று கூறினார். பெருகிவரும் மக்கள் தொகையால் இந்த விலங்குகளின் வாழ்விடங்கள் குறைந்துவருகின்றன, இதனால்தான் மனிதக் கட்டமைப்புகளுக்குள் விலங்குகள் இப்படி வந்துவிடுவதாக வனத்துறை தெரிவிக்கிறது. இந்தக் குட்டியை மீட்கும் வீடியோ இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் வைரல். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க