பெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்...விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5 | BMW X5 launched in India

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (17/05/2019)

கடைசி தொடர்பு:12:31 (17/05/2019)

பெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்...விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5

பெரிய பிளாட்ஃபார்ம், அதிக வசதிகள்...விற்பனைக்கு வந்துவிட்டது 4-ம் தலைமுறை X5

BMW நிறுவனத்தின் புதிய எஸ்யூவியாகக் களமிறங்கியுள்ளது X5. இது X5-யின் நான்காம் தலைமுறை கார். இதை மும்பையில் கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கரை கொண்டு அறிமுகப்படுத்தியது BMW. டிசைன் மற்றும் ஓடுதல் தன்மையில் பல மாற்றங்களோடு இன்று முதலே டீலர்ஷிப்களில் விற்பனைக்கு வந்துள்ளது X5. தற்போது முதற்கட்டமாக டீசல் மாடல்கள் ஷோரூம்களை அடைந்திருக்கும் நிலையில், பெட்ரோல் மாடல்கள் விற்பனைக்கு வர சில மாதங்களாகும் என்கிறது BMW.

BMW X5

டிசைன் 

முந்தைய மாடல்களை ஒப்பிடும்போது டிசைனில் பெரிய மாற்றங்களைக் கொண்டுள்ளது X5. முன்புற பெரிய கிட்னி டிசைன் க்ரில், புதிய பம்பர் மற்றும் ஹெட்லைட் டிசைன். பின்புறம் அகலமான டெயில்லைட் என அனைத்திலும் மாற்றங்களைச் செய்துள்ளது பிஎம்டபிள்யூ. புது வடிவத்தில் எல்ஈடி DRL மற்றும் 3D wrapping டெயில்லைட் கொடுத்துள்ளார்கள். புதிய கார் பிஎம்டபிள்யூவின் CLAR (Cluster Architecture) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஸ்பிளிட் டெயில் கேட் உடனான பின்புற தோற்றம்

இன்ஜின் மற்றும் பவர்  

ஸ்போர்ட் , X லைன், M ஸ்போர்ட் என மூன்று வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த காரில் 6 சிலிண்டர், 3 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்கிறது. இது 265bhp பவர் மற்றும் 620Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. BS VI விதிகளுக்கு உட்பட்ட 3 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும் வருகிறது. இது 340bhp பவர் மற்றும் 450Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டுமே ட்வின் பவர் டர்போ தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின்கள். M ஸ்போர்ட் வேரியன்ட்  பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே கிடைக்கும்.

இன்ஜின்

சிறப்பம்சங்கள் 

X5-ல் உள்ள அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன்கள் சாலைக்கேற்றவாறு சஸ்பென்ஷன் தன்மையை மாற்றிக்கொள்ளும் அம்சம் கொண்டவை. இதன் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் Xdrive எனும் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் சிறந்த ஆஃப் ரோடிங் அனுபவத்தைத் தரலாம். காரின் இன்டீரியரில் பல அப்டேட்டுகளை கொடுத்துள்ளது BMW. 650லி பூட் ஸ்பேஸ் மற்றும் 60-40 ஃபோல்டபிள் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவர்டு ஸ்பிளிட் டெயில் கேட், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஃபுல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஸ்போர்ட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

HUD டிஸ்பிளே, வில்கின்ஸ் ஸ்டீரியோ சிஸ்டம், ஸ்பீச் ரெகக்னிஷன் கன்ட்ரோல், பின் சீட்டுக்கான டச் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் புதுசு. ஆப்ஷனாக 3-வது வரிசை சீட்டைக் கூட கொடுக்கிறார்கள். அதிகபட்ச சிறப்பம்சமாக BMW பார்க்கிங் அசிஸ்ட் ப்ளஸ் என்ற தொழில்நுட்பத்தைக் கொடுத்துள்ளார்கள். இந்த வசதி மூலம் பேரலல் பார்க்கிங்கில் கார் தானாகவே பார்க் செய்துகொள்ளும்.

இன்டீரியர்

பாதுகாப்பு வசதிகள் 

பாதுகாப்பைப் பொறுத்தவரை 6 ஏர் பேக், CBC ( CORNERING BRAKE CONTROL ), DSC ( DYNAMIC STABILITY CONTROL) டிராக்க்ஷன் கன்ட்ரோல், ஹில் அஸ்சிஸ்ட், ISOFIX சைல்டு சேஃப்டி போன்ற வசதிகள் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா, side collision alert, பவர் பார்க்கிங் பிரேக், ரிவெர்ஸ் பார்க்கிங் அஸ்சிஸ்ட் என்று கூடுதல் பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் வருகிறது.

மூன்று நிறங்களில் வருகிறது X5

விலை

புதிய X5 மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஸ்போர்ட் வேரியன்ட் ரூ 72.9 லட்சம், X லைன் மற்றும் M ஸ்போர்ட் வேரியன்ட்கள் ரூ.82,4 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது. 3 வெளிப்புற நிறங்களும், 5 இன்டீரியர் நிறங்களும் ஆப்ஷனாகக் கிடைக்கிறது. மெர்சிடீஸ் GLE, வால்வோ XC90, ஆடி Q7, லேண்ட்ரோவர் டிஸ்கவரி போன்ற போட்டியாளர்களுக்கு மத்தியில் 2 வருட ஸ்டாண்டர்டு  வாரன்ட்டியோடு வந்துள்ளது புதிய X5 எஸ்யூவி.


டிரெண்டிங் @ விகடன்