`கருணாநிதி மற்றும் ரஜினியின் பயோகிராபி எழுதிக் கொண்டிருக்கிறேன்!' - எழுத்தாளர் வாஸந்தி | ''I am writing Karunanithi and Rajini's Biography now'' says, writer Vaasanthi

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (17/05/2019)

கடைசி தொடர்பு:15:08 (17/05/2019)

`கருணாநிதி மற்றும் ரஜினியின் பயோகிராபி எழுதிக் கொண்டிருக்கிறேன்!' - எழுத்தாளர் வாஸந்தி

ழுத்தாளர்களில் வாஸந்தி தனி ரகம்; அது ஆளுமை ரகம். இவருடைய பேனாவுக்கு நாவல்களும் எழுத வரும்; பத்திரிகைகளுக்கான அரசியல் கட்டுரைகளும் சரளமாக வரும். கணவரின் வேலை காரணமாக நேபாளம் சென்றால், அங்குள்ள வாழ்க்கை முறையை `நள்ளிரவுச் சூரியர்கள்' என்று சிறுகதைத் தொகுப்பாக நமக்குள் கடத்துவார். மிசோரம் சென்றால், அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையை `மூங்கில் பூக்களாக' நம் கண்களுக்கு முன்னே மலர வைப்பார். சில வருடங்களுக்கு முன்னால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி  ' Jayalalithaa: A Portrait'  என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகத்துக்குப் பின்னர் தடை விதிக்கப்பட்டது. தற்போது எழுத்தாளர் வாஸந்தி எப்படியிருக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்காக, டெல்லியில் இருக்கிற அவரைத் தொடர்புகொண்டோம்.

எழுத்தாளர் வாஸந்தி

``ஆங்கிலப் பத்திரிகைகளில் நிறைய அரசியல் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். தவிர, கருணாநிதி பற்றியும் ரஜினி பற்றியும் பயோகிராபி எழுதிக்கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  `இலக்கியச் சிந்தனை' அமைப்பு  அமுதசுரபியில் தீபாவளி மலருக்காக நான் எழுதிய சிறுகதையை, சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்திருந்தது. எழுத்தும் நானும் எப்போதும்போல ஒன்றாக பயணித்துக்கொண்டிருக்கிறோம். அது பிரிக்க முடியாத பந்தம்'' என்று மலர்ந்து சிரிக்கிறார் வாஸந்தி.