'346 பேரை பலிகொண்ட மென்பொருளுக்கு அப்டேட் தயார்!' போயிங் அறிவிப்பு | Boeing announces update for MCAS software in 737 MAX

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (18/05/2019)

கடைசி தொடர்பு:07:00 (18/05/2019)

'346 பேரை பலிகொண்ட மென்பொருளுக்கு அப்டேட் தயார்!' போயிங் அறிவிப்பு

போயிங் நிறுவனத்தின் 737 MAX 8 ரக விமானங்கள் ஐந்து மாதங்களில் இரண்டு கோரமான விபத்துகளைச் சந்தித்து கடும் சர்ச்சைக்குள்ளானது. முதல் விபத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் ஏர் (Lion Air) சேவையின் விமான, ஜாவா கடலில் விழுந்ததில் 189 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பின் ஐந்தே மாதங்களில் எத்தியோப்பியாவில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான 737 MAX 8 விமானம் தரையில் மோதி 157 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பின் உலகமெங்கும் இந்த விமானங்களைப் பறக்க தடைவிதித்தன அரசாங்கங்கள். பெரும் விமர்சனங்களுக்குள்ளானது இந்த விபத்துக்குக் காரணமாக இருந்தது இதில் இருந்த புதிய MCAS மென்பொருளும் கோளாறான சென்சார் ஒன்றும்தான்.

737 max போயிங்

இந்த விபத்துகள் எப்படி நடந்தன என விரிவாகப் படிக்க இந்தக் கட்டுரையைப் படிக்கவும்,

இந்த ஒரு சென்சார்தான் 2 விமான விபத்துகளுக்கும் காரணம்? சிக்கலில் போயிங்

இப்படி 346 உயிர்களைப் பலிவாங்கிய இந்த மென்பொருளுக்கு அப்டேட் தயாராகிவிட்டதாக அறிவித்திருக்கிறது போயிங். இந்த அப்டேட் செய்யப்பட்ட MCAS மென்பொருளுடன் 207 விமானங்கள் 360 மணிநேரங்களுக்குச் சோதனை செய்துபார்க்கப்பட்டுள்ளதாம். இப்போது Federal Aviation Administration (FAA) சான்றிதழுக்காகக் காத்திருக்கிறது போயிங். "இந்தப் புதிய அப்டேட்டுடன் 737 MAX உலகின் மிகவும்  பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாகும்" என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் போயிங் தலைவர் டென்னிஸ் முலென்பெர்க். எப்படியும் இந்தச் சான்றிதழ் வாங்க நேரம் எடுக்குமென்பதால் எப்படியும் ஆகஸ்ட் வரை 737 MAX விமானங்கள் பார்க்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

எத்தியோப்பிய விபத்து

ஏற்கெனவே இரண்டாவது விபத்துக்கு முன்பு விமானத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்துடன் போயிங்கிடம் கோபமாகக் கேள்வியெழுப்பும் விமானி ஒருவரின் ஆடியோ ஒன்றும் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. எனவே, இந்த அப்டேட்டுக்கு பிறகும் போயிங் முன்பிருந்த அளவில் இயங்க முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க