Published:Updated:

வீடுகளைச் சூறையாடிய ஃபானி - `தூய்மை இந்தியா' கழிவறைக்குள் வாழ்க்கை நடத்தும் குடும்பம்!

வீடுகளைச் சூறையாடிய ஃபானி -  `தூய்மை இந்தியா' கழிவறைக்குள் வாழ்க்கை நடத்தும் குடும்பம்!
வீடுகளைச் சூறையாடிய ஃபானி - `தூய்மை இந்தியா' கழிவறைக்குள் வாழ்க்கை நடத்தும் குடும்பம்!

ஒடிசா மாநிலத்தை கடந்த 3-ம் தேதி ஃபானி புயல் கடுமையாகத் தாக்கியது. அதில் சிக்கி 64 பேர் வரை பலியானார்கள். சுமார் இருபதாயிரம் கிராமங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாயின. இந்தப் புயலால், கேந்திரப்பாரா மாவட்டத்தில் உள்ள ரகுதேய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிரோத் ஜெனா என்ற 58 வயது கூலித்தொழிலாளியின் வீடு முற்றிலும் சேதமடைந்தது. 

வீடுகளைச் சூறையாடிய ஃபானி -  `தூய்மை இந்தியா' கழிவறைக்குள் வாழ்க்கை நடத்தும் குடும்பம்!

கிரோத் ஜெனாவுக்கு மனைவி மற்றும் அனுசயா ஜெனா, மனலதா ஜெனா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகள் அனுசயா ஜெனா ஒரு கல்லூரி மாணவி. இளைய மகள் மனலதா ஜெனா இப்போதுதான் ப்ளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார். ஃபானி புயல் வருவதற்கு முதல் நாளே அருகிலுள்ள பள்ளிக்கூடத்தினுள் குடும்பத்துடன் தஞ்சமடைந்தனர். புயலும், பெருமழையும் ஓய்ந்தபின் ஒரு நாள் கழித்து தனது வீட்டைப் பார்க்கச் சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி. அவர்கள் வசித்துவந்த வீடு முற்றிலும் சிதைந்து இருந்த இடம் தெரியாமல் கிடந்தது.

கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தவருக்கு வீட்டைச் சீரமைக்கக்கூட வசதியில்லை. அவர்களுக்கு `தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட 7 அடிக்கு 6 அடி நீள அகலமுள்ள கழிவறை ஒன்று இருந்தது. அந்தக் கழிவறை மட்டும் புயலில் பெருத்த சேதமின்றி தப்பியது. வேறு வழி தெரியாத அவர்கள், அந்தக் கழிவறையின் பீங்கானை ஒரு ப்ளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு, அந்த இடத்திலேயே சமையல் செய்து, உண்டு உறங்கிவருகிறார்கள்.

வீடுகளைச் சூறையாடிய ஃபானி -  `தூய்மை இந்தியா' கழிவறைக்குள் வாழ்க்கை நடத்தும் குடும்பம்!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆளுக்கு 500 ரூபாய் என்று கொடுத்த நிதியுதவி  மட்டுமே அவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் தற்காலிக டென்ட் அமைப்பதற்கான பாலித்தீன் ஷீட்டோ, மண்ணெண்ணெயோ கிடைக்கவில்லை. புயலுக்குப்பின் மிகவும் பரிதாபகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டதால், தங்களது படிப்பைத் தொடர்வதுகூட இனி சந்தேகமே எனப் பெண் குழந்தைகள் இருவரும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். 

இவர்களது நிலை பற்றித் தெரியவந்த மாவட்ட நிர்வாகம், உரிய விசாரணை நடத்தி, அவர்களுக்கு வீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இனியாவது அவர்களுக்கு ஒரு வீடு கிடைத்தால் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.