கனவு காரில் பெயரைப் பொறித்த தீவிர ரசிகர்...ஜாலியாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் | Fan names his car with Rahman's name

வெளியிடப்பட்ட நேரம்: 06:39 (19/05/2019)

கடைசி தொடர்பு:06:39 (19/05/2019)

கனவு காரில் பெயரைப் பொறித்த தீவிர ரசிகர்...ஜாலியாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகமெங்கும் ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரத்திற்காக வைத்திருக்கும் அன்பை பல விதங்களில் வெளிப்படுத்துவர். அப்படிதான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகர் ஒருவர் தற்போது ஒன்றைச் செய்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தர் என்னும் அந்த ரசிகர் தனது கனவு பிஎம்டபுள்யூ காரை வாங்கி அதில் 'I <3 ARR' என்று பெயர்ப்பலகையில் பொறித்துள்ளார். அதனுடன் அவர் எடுத்த புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளங்கள கணக்குகளில் பதிவிட்டுள்ளார். 

ரஹ்மான் ரசிகர்.

P.C. @Chanderr

ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்களில் இந்த புகைப்படம் வைராலாக பரவ விஷயம் ஏ.ஆர்.ரஹ்மான் காதுக்கே எட்டிவிட்டது. 'பார்த்து பத்திரமா ஓட்டுங்க' என ரசிகரின் அந்த ட்வீட்டை குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டார் ரஹ்மான். இன்ஸ்டாகிராமில் சந்தரின் போட்டோவின் கீழும் கமென்ட் செய்திருக்கிறார் அவர். இது சந்தருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. ரஹ்மானின் பதிவுகளை பகிர்ந்து தனது பேரானந்தத்தை வெளிப்படுத்தி வரும் சந்தர், தான் தீவிர ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகன் என்பதை காட்டும் விதமாக இன்ஸ்டாவில் அவரை மட்டுமே பின்தொடர்கிறார். ஒரு அபிமான கலைஞனுக்கும், ரசிகனுக்குமான டிஜிட்டல் உரையாடல் பலரையும் கவர்ந்துவருகிறது. சமூக வலைத்தளங்களில் இப்போது இது வைரல்.

ட்வீட்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க