Published:Updated:

ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் சி.பி.சி.ஐ.டி. முன் ஆஜராக 7 நாள் அவகாசம்

சென்னை: ஐ.பி.எல். சூதாட்ட விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. முன் ஆஜராவதற்கு காலஅவகாசம் கேட்டிருந்த ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு 7 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். சூதாட்ட விசாரணைக்காக கடந்த 30ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் விக்ரம் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் சம்மனை நிராகரித்த விக்ரம் அகர்வால் குறிப்பிட்ட தேதியில் சி.பி.சி.ஐ.டி முன் ஆஜராகவில்லை. மாறாக 31ஆம் தேதி மும்பை போலீசார் முன்பு ஆஜரானார்.

இதையடுத்து ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில், ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கடந்த 5ஆம் தேதி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு பதில் அவரது மனைவி வந்தனா சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது, கணவர் ஆஜராதது குறித்து விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ‘தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆதலால் அவர் அஜராவதற்கு கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும்’ என மனுவும் வழங்கினார்.

இந்த மனுவை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விக்ரம் அகர்வால் ஆஜராவதற்கு 7 நாட்கள் அனுமதி வழங்கியிருக்கிறது.