Published:Updated:

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

Published:Updated:
வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

உணவு, மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், போக்குவரத்து சேவை, லாண்டரி சேவை, ஹவுஸ் கீப்பிங் என பலதரப்பட்ட சேவைகளை இன்று மொபைல் ஆப்கள் மூலம் நொடிப்பொழுதில் பெறமுடிகிறது. இந்த வரிசையில் மிக முக்கிய சேவையான மருத்துவ சேவையை வழங்கி வருகிறது தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனமான NG Web Services –ன்  'Treat at Home app'.

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

ஒரு வாடகை காரை செயலியில் பதிவு செய்வதுபோல் அனைவரும் உபயோகிக்கும் வகையில் எளிமையாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. எலும்பியல் துறை வல்லுநரான டாக்டர் சலீம் அவர்களால் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், 8 வகையான மருத்துவ சேவைகளை மொபைல் ஆப் மூலம் வழங்கிவருகிறது. முதியோர், நோய் அல்லது காயம் காரணமாக நடக்க இயலாதோர் போன்றவர்களுக்கு வீட்டிலேயே அவர்கள் விரும்பும் நேரத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்குவது வரவேற்கத்தக்க விஷயமாகும்.  
மற்றவர்களுக்கும் இதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு நோயாளிகள் தங்களுக்கு அருகில் உள்ள யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்ய இயலும், அதனால் கட்டணமும் குறையும்.

அயல்நாட்டில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான மருத்துவ சேவைகளை அங்கிருந்தே பதிவு செய்ய முடியும்.

8 வகையான சேவைகள்!

ஒரே மொபைலில் நோயாளிகள், பயனர்(user) ஆகவும், சேவை அளிப்பவர் provider ஆகவும் பதிவு செய்யலாம்.

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

*டாக்டரை வீட்டுக்கு அழைத்தல்  * செவிலியர் சேவை  * பிஸியோதெரப்பி *ஆம்புலன்ஸ்  * மெடிக்கல் லேப் டெஸ்ட்  * மருந்துகள்  *மருத்துவமனை அப்பாயின்ட்மென்ட்  * இணைய ஆலோசனை ஆகிய எட்டு முக்கிய மருத்துவ சேவைகளை தற்போது வழங்கிவருகிறது Treat at Home. 

இனி வீட்டிலேயே டாக்டர்!

மூப்பு காரணமாக, நம் வீட்டு பாட்டி, தாத்தாவுக்கு  ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை உள்ளிட்ட சோதனைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டி வரலாம். இதற்காக ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் செல்வது அவர்களுக்கு சிரமமான காரியமாகும். இதுமட்டுமல்லாது, காயம் காரணமாக நடக்க/அசைய இயலாதவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் சற்று கடினமே. இவர்களுக்காக, மருத்துவர்களை நேரில் அழைத்து வைத்தியம் பார்க்கும் முறையைக் கையாள்கிறது Treat at Home. மொபைல் ஆப் மூலமாக நமக்குத் தேவையானபோது அருகாமையில் உள்ள டாக்டரை அணுகலாம். இங்கு காணப்படும் டாக்டர்கள் ஒவ்வொருவரின் மருத்துவ தேர்ச்சி மற்றும் அனுபவத்தை பரிசீலனை செய்தபிறகே, நமக்கு சேவையாற்ற அனுமதி வழங்குகிறது Treat at Home. வேலை காரணமாக, மருத்துவமனைக்குச் செல்ல நேரமில்லாதவர்களுக்கும் இச்சேவை உதவுகிறது.

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

மருத்துவருக்கு அடுத்தபடி, நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களை கவனித்துக்கொள்ள செவிலியர் சேவையை வழங்குகிறது Treat at Home. விபத்துக்குள்ளாகி சில மாதகாலம் வீட்டிலேயே ஓய்வெடுப்பவர்கள் மற்றும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு ஒருவர் உடனிருந்து பக்குவமாக சேவை செய்வது அவசியம். மருத்துவ அறிவுகொண்ட ஒரு நபரே இதற்கு சரியான தேர்வாக இருக்கமுடியும். பயிற்சிபெற்ற, அனுபவமிக்க செவிலியர்களின் சேவையை Treat at Home மூலம் பெற்று பயன்பெறலாம்.

இது தவிர, லேப் சேவைகளையும் இங்கு பெறமுடியும். ரத்தப் பரிசோதனை செய்ய வெறும் வயிற்றில் காலை வேலையில் பரிசோதனை மையத்துக்குச் செல்வதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். இவ்வாறானவர்கள், தங்களுக்கு அருகாமையிலுள்ள மருத்துவ பரிசோதனை மையத்தை Treat at Home மூலம் தொடர்புகொண்டு, சாம்பிள்களை வீட்டிலிருந்தே வழங்கலாம், பரிசோதனை முடிவுகளும் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். 

அடுத்ததாக டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள், அவசரத்துக்கு தேவையான மருந்து பொருட்களை ஆர்டர் செய்து, குறைந்த விலையில் வாங்கமுடிகிறது.

அவசர உதவிக்கு நம் அருகில் உள்ள ஆம்புலன்ஸையும் மொபைல் ஆப்-இல் பார்த்து அதை உடனடியாக வரவழைக்கலாம், இதனால் அவசரகாலத்தில் பொன்னான நேரம் மிச்சப்படுகிறது, நோயாளியையும் விரைந்து காப்பாற்ற முடிகிறது. 

உங்களின் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல, அப்பாயின்ட்மென்ட் பெற்றுத்தரும் வசதியும் Treat at Home-இல் உள்ளது.

இணைய ஆலோசனை

இணையம் மூலம் மருத்துவரின் ஆலோசனையை செயலி மூலம் பெறக்கூடிய வசதி அனுகூலமானது. நேரலை காணொளி (அ) வீடியோ காலிங் மூலமாக மருத்துவர்கள் நமக்கான மருந்துகளைப் பரிதுரைக்க இயலாது. மாறாக, ஒரு மருத்துவர் நம்மை எடுக்கச்சொல்லும் மருத்துவ முறை / அறுவை சிகிச்சை குறித்த சந்தேகங்களை அந்த விஷயத்தில் பல வருட அனுபவம் வாய்ந்த மற்றொரு மருத்துவ நிபுணரிடம் கூறி ஆலோசனை பெறமுடியும். இதுமட்டுமல்லாது, அவசரகாலத்தில் சமீபத்தில் மருத்துவமனை இல்லாதபோது, போன் கால் அல்லது வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு அவர்களின் ஆலோசனையைப் பெறலாம்.

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

பொது மருத்துவம், நரம்பியல், எலும்பியல், சிறுநீரகவியல், இதய நோயியல், பெண்களுக்கான பிரத்யேக மருத்துவர் உள்ளிட்ட 35 வகையான மருத்துவர்களை Treat to Home மருத்துவ சேவையின் வாயிலாக அணுகமுடியும். Treat at Homeஎன்று டைப் செய்து, ஆண்டிராய்டு செயலியை தரவிறக்கம் செய்யலாம்

Treat at Home மற்ற App-களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

நீங்கள் app-ஐ திறக்கும்போது, உங்கள் பகுதியில் உள்ள சுகாதார சேவை வழங்குநர்கள் வரைபடத்தில்(Map-ல்) காட்டப்படுவார்கள்.

நீங்கள் எந்தவொரு சேவை வழங்குநரை புக் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்ய முடியும்.

மருத்துவ சேவையை தங்களுக்கு விருப்பமான நேரத்தில் பெறும் (அட்டவணை நேரம்- (schedule time)) வசதி உள்ளது.

உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் உள்ள சேவை வழங்குனரை தேவைப்படும் நேரத்தில் உங்கள் அன்பானவர்களுக்காக பதிவு செய்யலாம்.

சேவையைப் பதிவு செய்யும்போதே, சேவை வழங்குனரிடம் தொலைபேசி வாயிலாக தேவைப்படும் தகவல்களையும், கட்டண விவரங்களையும் தெரிவிக்கவேண்டும்.

ஒவ்வொரு நபருக்கும் சேவைத் தேவைகள் வேறுபடுகின்றன, ஆகவே நிலையான கட்டணம் ஒன்றை நிர்ணயம் செய்ய முடியாது, எனவே சேவையைப் பெறுவதற்கு முன்னர் கட்டணத்தை உறுதி செய்யுங்கள்.

App-ன் மூலம் சேவையை பெறுவதற்கான சரியான/சாத்தியமான நேரத்தைக் குறிக்கும் SMS செய்தி, மின்னஞ்சல் அல்லது விரைவு அறிவிப்பைப் பெறலாம்.

நேரடிப் பதிவு(Direct booking)

செயலியை உபயோகிக்க சிரமம் இருந்தால் ‘நேரடிப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைப்பதன் மூலம் எந்த ஒரு மருத்துவ சேவையையும் உடனடியாகப் பெறலாம்.

பயனர் மதிப்பீடு மற்றும் உடனடித்தொடர்பு ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் அருகில் உள்ள சுகாதார சேவை வழங்குனரின் சேவையை நீங்கள் பெறுவீர்கள். 

இணைய தளம்: www.treatathomes.com

நேரடி சேவைக்கு: +91 7305181416 / +91 944 2222 700(Chennai).

வீடு தேடி வரும் மருத்துவ சேவை!

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Treat at Home-இன் விளம்பரதாரர் பகுதி. இந்த ஆப்'இல் புக் செய்யும் மருத்துவர் மற்றும் மருத்துவ சேவை வழங்குவோரின் நம்பகத்தன்மையை பயனாளிகள் சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும். இதில் வழங்கப்படும் சேவைகளுக்கு விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல.