``புஷ்பவனம் குப்புசாமி சொன்ன கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!" - செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி | Rajalakshmi and Senthil Ganesh talks about Pushpavanam Kuppusamy's take on Makkal Isai

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (24/05/2019)

கடைசி தொடர்பு:12:40 (24/05/2019)

``புஷ்பவனம் குப்புசாமி சொன்ன கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!" - செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

"சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் வாங்குகிற சம்பளம் எவ்வளவுன்னு என்னைக்காவது நாம ஆய்வு பண்ணியிருக்கோமா? அதுவே கஷ்டப்பட்டு முன்னேறி வர்றவங்களை மட்டும் ஏன் அப்படி பார்க்கிறோம்னு எனக்கு தெரியலை. யாரும் அவங்க வாங்குகிற சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்ல மாட்டாங்க. நாங்க வெளிப்படையாகவே சொல்றோம்."

``நாட்டுப்புறக் கலைஞர்கள் எங்கள் மூலமா ஏதோ ஒரு வகையில் முன்னேற்றம் அடையுறாங்கன்னா அதை விடப் பெரிய சந்தோஷம் எங்களுக்கு வேறெதுவும் தேவையில்லை!" எனப் புன்னகைக்கிறார்கள் நட்சத்திர தம்பதியான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி. மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு போட்டி போட்டார்கள். மேடை நிகழ்ச்சிகளில் பாடுவது, சினிமாவிற்குப் பாடல்கள் பாடுவது என பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர்களை, காலைப் பொழுதில் சந்தித்துப் பேசினோம். நாம் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு `நச்' பதிலைக் கொடுத்துக்கொண்டிருந்தார் ராஜலட்சுமி.

ராஜலட்சுமி - செந்தில்

வளர்ந்து வரக்கூடிய கலைஞராக இருக்கக்கூடிய நீங்கள் எதிர்கொள்ளும் சவால்?

எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் சில சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆரம்பத்தில் கிராமப்புறங்களில் பாடிட்டு இருந்தோம். இப்போ அதற்கடுத்த நிலைக்கு வந்திருக்கோம். பெரிய இடத்துல இருக்கிறவங்களுக்கும், சாதாரண நிலையில் இருக்கிறவங்களுக்கும் இருக்கிற பிரச்னைகளை விட, இவை இரண்டுக்கும் நடுவில் ஓடிக்கொண்டிருப்பவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

நெடுவாசல் பிரச்னைக்கு எதிரான போராட்டத்தில் நீங்க கர்ப்பிணியாக இருந்த சமயம் பாடிய பாடல் வைரலானது! இனியும் போராட்டக் களத்தில் உங்களைச் சந்திக்கலாமா?

எல்லாப் போராட்டத்திலும் நானும் சரி, என் கணவரும் சரி சக மனுஷங்களாக நம்மளுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கணும்னு நினைப்போம். கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செஞ்சிட்டு இருந்தோம். அந்தச் சமயம் நாங்க தொடர்ந்து பிஸியாக ஓடிட்டு இருந்ததால் எங்களால் பதிவு எதுவும் போட முடியலை. புல்வாமா தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசந்திரனுடைய வீட்டுக்குப் போயிருந்தோம். அவங்களுடைய துக்கத்தைப் பகிர்ந்துட்டு எங்களால் முடிந்த உதவித்தொகை கொடுத்துட்டு வந்தோம். அதைப் பதிவா போட்டிருந்தோம். உடனே சிலர், கஜா புயலின் போது எங்கே போயிருந்தீங்கன்னு கேட்குறாங்க..? ஒவ்வொருத்தரிடமும் நம்மளை நிரூபிக்க முடியாதுங்க. ஆனா, நிச்சயமா எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஒரு தமிழராக நாங்க அதில் கலந்துப்போம். ஆனா, யாராச்சும் இவங்க விளம்பரத்துக்காக வராங்கப்பான்னு சொல்லிடுவாங்களோங்குற எண்ணமும் ஓடிட்டே இருக்கு" என்ற ராஜலட்சுமியைத் தொடர்ந்து செந்தில் கணேஷ் பேசினார்... "நெடுவாசல் போராட்டத்தின் போது கர்ப்பிணியைக் கூட்டத்துக்குள்ளே கூட்டிட்டு போகணுமான்னு கொஞ்சம் யோசிச்சேன். ஆனாலும் இது நம்மளுடைய பிரச்னை நாமதான் போய் நிற்கணும்னு கூட்டிட்டுப் போயிட்டேன்."

செந்தில் ராஜலட்சுமி

Image Courtesy: Rajeev Prasad.A

நீங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அதிக அளவில் பணம் கேட்குறீங்கன்னு சொல்றாங்களே..?

கேள்வி கேட்டதும் சட்டென ராஜலட்சுமி தொடர்ந்தார்.. ``சம்பளம் என்பது ஒருவருடைய வாழ்வியல் சார்ந்த விஷயம். சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் வாங்குகிற சம்பளம் எவ்வளவுன்னு என்னைக்காவது நாம ஆய்வு பண்ணியிருக்கோமா? அதுவே கஷ்டப்பட்டு முன்னேறி வர்றவங்களை மட்டும் ஏன் அப்படி பார்க்கிறோம்னு எனக்கு தெரியலை. யாரும் அவங்க வாங்குகிற சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்ல மாட்டாங்க. நாங்க வெளிப்படையாகவே சொல்றோம். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கச்சேரியில் பாடுறதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கேட்கிறோம். நாங்க வலுக்கட்டாயமாகக் கேட்கிறது இல்லை. இருக்கிறவங்க கொடுப்பாங்க.. இல்லாதவங்க எங்களால் இவ்வளவுதான் கொடுக்க முடியும்னு சொல்லுவாங்க. பரவாயில்லைன்னு அந்தப் பணத்தை வாங்கிட்டும் நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கோம்" என்றதும் செந்தில் கணேஷ் பேச ஆரம்பித்தார். ``நாங்க வாங்குற ஒன்றரை லட்ச பணமும் எங்களுக்கானது மட்டுமல்ல. அந்தப் பணத்தில் பாதித் தொகை எங்க கூட நிகழ்ச்சிகளில் பாட வருகிற கலைஞர்களுக்கும்தான். ஆட்டக்கலைஞர்களுக்கு எங்களால் முடிந்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கணுங்குறது எங்களுடைய ஆசை."

 

சமீபத்தில் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் நாங்கள் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்ற மக்கள் இசையை சிலர் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள்னு சொல்லியிருந்தாங்க. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

``மூத்த கலைஞரா நாட்டுப்புறக் கலைக்கு அவருடைய பங்கு மிக முக்கியமானது. நாட்டுப்புற இசை அப்படிங்குறது வெறும் இசை மட்டுமே சார்ந்த ஒன்று இல்லைங்க. அது சாதி அரசியலைப் பேசக்கூடிய ஒரு கலை. நாங்க சமூக அக்கறையோடதான் பாடல்களைப் பாடுறோம். குழந்தைகள், பெண்கள்னு எல்லோரும் எங்க பாடல்களைக் கேட்குறாங்கங்குற புரிதல் எங்களுக்கு இருக்கு. அதுமட்டுமல்லாமல் கோயில் நிகழ்ச்சிகளில் பாடுறோம். அப்போ எப்படிப்பட்ட விஷயங்கள் குறித்து பாடணும்னு யோசிச்சுதான் பாடுறோம் என்ற செந்தில் கணேஷை நிறுத்தி ராஜலட்சுமி தொடர்ந்தார். முந்தைய காலத்துல நம்மளுடைய மூத்தக் குடி வேலை செய்யுற கலைப்பு தெரியக் கூடாதுன்னு அவங்க மன வலி தீர ஆடி, பாடுவாங்க. அதுதான் இப்போ நாம சொல்கிற நாட்டுப்புறக் கலை. இதை நான்தான் உயர்ந்த நிலைக்குக் கொண்டு போனேன்னு யாருமே சொல்ல முடியாது. ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்துகிட்டே பாடுறதுதான் நாட்டுப்புற கலைன்னு சொல்றதையும் ஏற்றுக்கொள்ள முடியாதுங்க."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்