புரொமோஷன் கிடைக்க... செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்! | Do's and Don'ts: Tips to Get Promotion

வெளியிடப்பட்ட நேரம்: 07:03 (27/05/2019)

கடைசி தொடர்பு:07:03 (27/05/2019)

புரொமோஷன் கிடைக்க... செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்!

நம் பணி வாழ்க்கையில் 'கேரியர் பிளானிங்’ முக்கியம். என்னென்ன திறன்கள் நம்மிடம் இருக்கிறது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்போம் என்று திட்டவட்டமாக முடிவெடுப்பது அவசியம்.

புரொமோஷன் கிடைக்க... செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும்!

லுவலகங்களில் வேலை பார்க்கும் பலர், பெரிய அளவில் பதவி உயர்வு எதுவும் கிடைக்காமல் ஒரே பதவியில் பல ஆண்டுகள் தங்கிவிடுவதற்குக் காரணம், செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல்போவதும், செய்யக் கூடாத விஷயங்களைச் செய்வதுமே.

செய்ய வேண்டியவை:

1. அலுவலகம் என்றாலே முதலில் செய்ய வேண்டியது சரியான நேரத்தில் அலுவலகம் வருவது. இந்தப் பழக்கம் இருந்தாலே உங்களது பாஸுக்கு உங்கள் மீது தனிப்பட்ட மதிப்பு பிறக்கும். இது உங்களின் முன்னேற்றத்துக்கு முக்கியமான வழியும்கூட.

2. குழுவாகப் பணிசெய்யும் இடத்தில் தனது முன்னேற்றம்தான் முக்கியம் என்று இருக்காமல், அனைவரது முன்னேற்றத்திலும் முக்கியத்துவம் காட்டுவது நல்லது. இதனால் நாம் முன்னேறுவதுடன் பணிகளும் விரைவில் முடியும்.

3. ஒருவரைப் பார்த்தவுடன் எடைபோடும் விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அதில் உடை நேர்த்தி என்பது மிக முக்கியமான விஷயம்.  இன்டர்வியூவில் மட்டும் அல்லாது, அலுவலகத்துக்கு வரும்போது தினமும் உடை நேர்த்தியில் முக்கியத்துவம் காட்ட வேண்டும்.

புரமோஷன்

4. பேசும் திறன் முழுமையாக இல்லாவிட்டாலும் முறையானதாக இருக்க வேண்டும். சரியான தகவல் பரிமாறும் திறன், இங்கிதமாகப் பேசும் பக்குவம் அவசியம். மிக முக்கியமாக, சக ஊழியர்களுடனான நல்லுறவு, சக ஊழியர்களுக்கு உதவும் குணம், அவர்களிடம் வைத்திருக்கும் நட்பு போன்றவை நல்ல மதிப்பை உண்டாக்கும்.

5. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும், வேலைக்குத் தொடர்பில்லாத விஷயமாக இருந்தாலும் புதிது புதிதாக விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருத்தல் அவசியம். இந்தப் பண்பு, பிற ஊழியர்களிடமிருந்து நம்மை தனித்துக்காட்ட உதவும்.

6. வேலைகளில் அடுத்தவர்கள் சொல்லிவரும் உந்துதலைவிட, அவரவரிடம் இருந்து ஏற்படும் உந்துதல் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கும்.

7. நம் பணி வாழ்க்கையில் `கரியர் பிளானிங்’ முக்கியம். என்னென்ன திறன்கள் நம்மிடம் இருக்கின்றன, அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்போம் எனத் திட்டவட்டமாக முடிவெடுப்பது அவசியம்.

8. பணியிடத்தில் எப்போதுமே வேலைகள் தரப்படும். ஆனால், தரப்படும் வேலைகளை மட்டுமே செய்யாமல், தானாக முன்வந்து சில வேலைகளைச் செய்துகாட்டுவது நல்லது. அப்போது உங்கள் மீதான நம்பிக்கை தலைமையிடத்தில் இருப்பவருக்கு அதிகரிக்கும். மேலும், தலைமைப் பண்பை நிரூபிக்க இதுமாதிரியான செயல்கள் ஒரு வாய்ப்பாக அமையும்.

செய்யக் கூடாதவை:

1. பொதுவாக இன்றைய தலைமுறையினரில் சிலர் கடினமாக உழைக்கத் தயாரில்லை. காலையில் தாமதமாக அலுவலகம் வந்து மாலையில் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும் என நினைக்கிறார்கள். இது நிச்சயமாக முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது.

2. அலுவலக நேரத்தில் இருக்கையில் இருக்காமல், அடிக்கடி காணாமல்போவது, வங்கிக்குச் சென்று பணம் செலுத்துவது, ஷாப்பிங் செல்வது போன்ற தனிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கூடாது. இது மாதிரியான செயல்கள் பணியாளர்களின் மீதுள்ள மதிப்பைக் குறைத்துவிடும். முக்கியமாக, அலுவலக நேரத்தை வீணடிக்கிற மாதிரியான எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது. 

புரமோஷன்

3. அலுவலக போன்களை சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்துவது, கணினி, இ-மெயில், இணையம் உட்பட அலுவலக உபகரணங்களைத் தனிப்பட்ட விஷயங்களுக்காகப் பயன்படுத்துவது கூடாது.  

4. உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை போன்றவற்றுக்கு அலுவலகம் அளிக்கும் நேரத்துக்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 

 5. ``லீவு கேட்டா தரமாட்டாங்க. அதனால லீவு போட்டுட்டு நாளைக்குப் போயி சொல்லிக்கலாம்'' என்கிற அணுகுமுறை சரியல்ல. சின்னச் சின்ன காரணங்களுக்காக அடிக்கடி விடுமுறை போடுவதும் வளர்ச்சிக்கு வழிவகுக்காது.


டிரெண்டிங் @ விகடன்