'திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்' - நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்! #ViralVideo | Viral photo of Whale diving near a fishing ship

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (26/05/2019)

கடைசி தொடர்பு:12:34 (28/05/2019)

'திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்' - நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்! #ViralVideo

காலிபோர்னியா மாகாணத்தின் மொன்டெரெ வளைகுடாவில் ஒரு சிறிய கப்பலில் தூண்டில் கொண்டு மீன் பிடித்துகொண்டிருந்ததார் ஒரு மீனவர். அப்போது திடீரென பெரிய ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று கடலில் இருந்து வெளியே வந்து டைவ் அடித்தது.  இந்த கப்பலிருந்து வெறும் சில மீட்டர் தூரத்தில் இது நடந்தது. இதைத் தூரத்தில் இருந்த டக்ளஸ் க்ரோஃப்ட் என்னும் 60 வயது  புகைப்படக்கலைஞர் படம்பிடித்தார். ஐவரும் கேட் கம்மிங்ஸ் என்பவரும் இந்த திமிங்கிலங்களை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

திமிங்கில டைவ்

P.C: Douglas Croft

இவர்கள் எடுத்த இந்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரல். இந்த பிரமாண்ட காட்சியைப் பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்துவருகின்றனர். பொதுவாக இந்த சீசனில் சாலமன் மீன்கள் அதிக அளவில் காணப்படும் என்பதால் இந்த திமிங்கிலங்கள் இந்த ஏரியாவிற்கு கோடைக்காலங்களில் தவறாமல் வந்து விருந்து உண்ணும். அதே சமயம் மீனவர்களும் இப்போதுதான் மீன்பிடிக்க அதிக அளவில் செல்வர். இதனால் இப்படி நடப்பது சாதாரணம்தானாம். புகைப்படம் எடுத்த டக்ளஸ்,"கப்பல் சற்றே அருகில் இருப்பதால் திமிங்கிலம் கொஞ்சம் சிறிதாகத் தெரிகிறது. ஆனால் மிகவும் பிரமாண்டமாவை இவை. இது வழி நெடுகே டைவ் அடித்துக்கொண்டே வேட்டைக்குத் தயாராகி கொண்டிருந்தது. இதனால் அடுத்த டைவ் இந்த கப்பல் அருகே நடக்கும் எனக் கணித்து இந்த புகைப்படங்களை எடுத்தோம்" என்றார். 

 

Video link: https://twitter.com/Ode26/status/1128025994714075137

நீங்க எப்படி பீல் பண்றீங்க