டியூஷன் பீஸுக்காகத் தொடங்கிய உணவகம், இன்று பல்லாயிரம் கிளைகள் - சப்வே சக்சஸ் ஸ்டோரி | Origin and inspirational story of Subway restaurants

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (05/06/2019)

கடைசி தொடர்பு:12:04 (05/06/2019)

டியூஷன் பீஸுக்காகத் தொடங்கிய உணவகம், இன்று பல்லாயிரம் கிளைகள் - சப்வே சக்சஸ் ஸ்டோரி

டியூஷன் பீஸுக்காகத் தொடங்கிய உணவகம், இன்று பல்லாயிரம் கிளைகள் - சப்வே சக்சஸ் ஸ்டோரி

`பாஸ்ட் ஃபுட்' உணவகங்களில் `சப்வே'க்கு என்றைக்குமே தனி இடமுண்டு. 17 வயது நிரம்பிய சிறுவன், தன் டியூஷன் கட்டணம் செலுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட சிறிய கடை, இன்று உலகமெங்கிலும் சுமார் 50,000 பிரான்சைஸிக் கடைகளைக்கொண்டு, மக்களின் ஃபேவரிட் சாண்ட்விட்ச் உணவகமாக மாறியுள்ளது. 1,000 டாலரில் தொடங்கிய உணவகத்தை, உலகளவில் வெற்றிபெறச் செய்த ஃப்ரெட் டீலூக்காவின் (Fred DeLuca) சக்சஸ் ஸ்டோரி நிச்சயம் அனைவரையும் ஊக்கப்படுத்தும்.

சப்வே நிறுவனர்கள்

1965-ம் ஆண்டு, தன் குடும்ப நண்பரான பீட் பக்ஸ் என்பவரிடமிருந்து 1,000 டாலரைப் பெற்றுக்கொண்டு, அமெரிக்காவின் கன்னெக்ட்டிகட் மாநிலத்தில் சிறிய உணவகம் ஒன்றைத் தொடங்கினார் ஃபிரெட். மருத்துவர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்த ஃபிரெட், தன் டியூஷன் கட்டணத்தைச் செலுத்துவதற்காக, பகுதி நேர வேலையாக ஆரம்பித்ததுதான் இந்த உணவகம். அந்தக் காலகட்டத்தில் நீளமான ரொட்டினுள் காய்கறிகளை அடைத்துத் தயாரிக்கப்படும் `சப்மரைன் சாண்ட்விட்ச்' மிகவும் பிரபலம். அதனால் தன் உணவகத்துக்கு, `பீட் சூப்பர் சப்மரைன்ஸ்' எனப் பெயர் சூட்டி, குறைந்த விலையில் சாண்ட்விட்சுகளை வழங்கினார் ஃபிரெட். தரமான ரொட்டி, ஃப்ரெஷ் காய்கறிகள் எனத் தனித்துவமான காம்பினேஷன்களோடு இங்கு கொடுக்கப்பட்ட சாண்ட்விட்ச் வித்தியாசமாக இருந்ததால், மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. முதல் நாளே, 312 சாண்ட்விட்சுகள் விற்கப்பட்டன.

Pete Bucks

ஒரு வருடம் கழித்து, உணவகத்தின் விரிவாக்கத்தை மேற்பார்வையிட பீட் மற்றும் ஃபிரெட் இணைந்து `டாக்டர்ஸ் அசோசியேட்ஸ்' என  ஹோல்டிங் நிறுவனத்தை நிறுவினர். நாளடைவில் `பீட்ஸ் சப்மரைன்' எனப் பெயர் மாற்றப்பட்டது. ஆனால், இந்தப் பெயரை வானொலிகளில் கூறும்போது, `பீட்சா மரைன்' எனத் தவறாக ஒலி எழுப்பப்படுகிறது என்ற புகார் எழுந்ததால், `பீட்ஸ் சப்ஸ் (Pete's Subs)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சாதாரண சாண்டிவிட்சில் இவர்கள் செய்த வித்தியாச முயற்சி, மக்களின் ஃபேவரிட்டாக மாறியது. உலகளவில் தங்களின் உணவகத்தை விரிவுபடுத்த நினைத்தவர்கள், `சப்வே' எனப் பெயரை மாற்றியமைத்தனர்.

1975-ம் ஆண்டு, Massachusetts, ஃபுளோரிடா, கலிபோர்னியா போன்ற இடங்களில், தங்களின் அடுத்தடுத்த உணவகங்களைத் திறந்தனர். 1982-ம் ஆண்டு, அமெரிக்காவின் மிகப்பெரிய `sub chain' இந்த சப்வே எனப் போற்றப்பட்டது. 1984-ம் ஆண்டு, முதன்முதலில் அமெரிக்கா அல்லாமல் வெளிநாடுகளிலும் உணவகத்தை நிறுவத் தொடங்கினர். அந்த வகையில் பக்ரைனில்தான் முதல் உணவகம் தொடங்கப்பட்டது. 21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகளவில் சுமார் 40,000 உணவகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை ஃபிரான்சைஸி உணவகங்களே.

Jared Fogle

இன்று வரை உலகளவில் அதிக கிளைகளைக்கொண்டிருக்கும் உணவகம் இதுதான். இதன் மார்க்கெட்டிங் நுட்பம் மக்களை அதிகம் ஈர்த்தது. அதில், `சப்வே டயட்' எனும் கான்செப்ட் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. Jared Fogle என்பவர் சப்வே சாண்ட்விட்சுகளைச் சாப்பிட்டு, சுமார் 100 கிலோ உடல் எடையைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது. இவர் மதியம், சீஸ் அல்லது மயோனைஸ் சேர்க்கப்படாத ஆறு இன்ச் டர்கி சாண்ட்விட்ச்சும், இரவு முழுநீள காய்கறி சாண்ட்விட்ச்சும் சாப்பிட்டு எடையைக் குறைத்திருக்கிறார். 2013-ம் ஆண்டு, ஃபேஷன் ஷோவிலும் தன் தடத்தைப் பதித்தது. இதில், சப்வே உணவகங்களில் இருக்கும் காய்கறிகளை வைத்து ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்பதே வடிவமைப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க். இப்படி, பல வித்தியாச முயற்சிகளில் தைரியமாக ஈடுபட்டு வெற்றியும் கண்டது.

Ingredients

2001-ம் ஆண்டு, இந்தியாவில் தன் சப்வே உணவகத்தை புதுடெல்லியில் திறந்தது. தொடர்ந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல், இந்திய மக்களின் விருப்பத்துக்கேற்ப, சாண்ட்விட்ச்சில் அடக்கும் பொருள்களை மாற்றியமைத்து வழங்கப்பட்டது. தற்போது 500-க்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகளைக் கொண்டிருக்கிறது. கண்முன்னே தயாரிக்கப்படும் ஃப்ரெஷ் பிரெட், வெள்ளை அல்லது கோதுமை ரொட்டி ஆப்ஷன்ஸ், விருப்பத்துக்கேற்ப காய்கறி மற்றும் இறைச்சி தேர்வுசெய்யும் சுதந்திரம் எனப் புதுமையான உத்தியே இவர்களின் இத்தகைய வெற்றிக்குக் காரணம்.

விதவிதமான மார்க்கெட்டிங் தந்திரம் மூலம், தனக்கென்று தனிப்பட்ட மக்கள் கூட்டத்தைச் சேர்த்து வைத்திருக்கிறது சப்வே. 2015-ம் ஆண்டு, உடல்நிலை சரியில்லாமல் ஃப்ரெட் காலமானார். சாண்ட்விட்ச் செய்யத் தெரியாத இளைஞர், தன்னம்பிக்கை எனும் இன்கிரீடியன்ட் ஒன்றை மட்டும் வைத்து உலகளவில் தன் உணவகத்தை வெற்றிகரமாக விரிவாக்கம் செய்த ஃப்ரெட், உண்மையில் அனைவருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.


டிரெண்டிங் @ விகடன்