முடிகிறது டொயோட்டா கரோலாவின் கதை... பிஎஸ்-VI அப்டேட் கிடையாது! | Toyota planned to end corolla altis sales

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (27/05/2019)

கடைசி தொடர்பு:14:20 (27/05/2019)

முடிகிறது டொயோட்டா கரோலாவின் கதை... பிஎஸ்-VI அப்டேட் கிடையாது!

இந்தியாவில் வேண்டுமானால் மாருதி அதிகம் விற்கலாம். ஆனால், உலகிலேயே அதிகம் விற்பனையாகும் கார் என்றால் அது கரோலா ஆல்ட்டிஸ்தான். டொயோட்டோவின் நீண்டகால பொக்கிஷமாக இருக்கும் கரோலா ஆல்ட்டிஸின் பயணத்தை ஏப்ரல் 2020-க்குள் முடித்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்கள். 

கரோலா ஆல்ட்டிஸ்

தற்போது இந்தியாவில் எஸ்யூவி மோகம் அதிகரித்துவருகிறது. இதனால், எக்சீகியூடிவ் செடான்களின் விற்பனை பெரிதளவில் சரிந்துள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா, ஹூண்டாய் எலென்ட்ரா வரிசையில் ஆல்ட்டிஸின் விற்பனையும் கடந்த ஆண்டு 30 சதவிகிதம் வரை சரிந்துள்ள நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளது இந்நிறுவனம். தற்போது சுஸூகியுடன் வைத்துள்ள தொழில்நுட்ப பங்கீட்டின்படி மாருதி சுஸூகி பேட்ஜிங்கில் புதிய கரோலாவை அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தது. இந்நிலையில் BS VI  இன்ஜின் அப்கிரேட் மற்றும் விற்பனை எதிர்பார்ப்பில் ரிஸ்க் எடுக்க இந்த இரு நிறுவனங்களுக்கும் விருப்பம் இல்லை எனத் தெரிவதால் கரோலாவின் கதையை முடித்துக்கொள்கிறார்கள். 

மாருதி சுஸூகியுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் டொயோட்டாவிடம் இருந்த இன்ஜின் மற்றும் தொழில்நுட்ப உதவி மட்டுமே மாருதிக்குக் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. எக்சீகியூடிவ் செடான் செக்மென்ட் வீழ்ச்சியில் இருக்க ஹோண்டா புதிய சிவிக் மாடலை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.