நீங்களும் வெல்லலாம் வைர பெண்டென்ட்!!! #Guess&Win | Guess and Win exciting prices from VBC.

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (27/05/2019)

கடைசி தொடர்பு:17:14 (31/05/2019)

நீங்களும் வெல்லலாம் வைர பெண்டென்ட்!!! #Guess&Win

வைரம், நவமணிகளில் முதல் இடம் இதற்குத்தான். நாம் அணியும் ஒவ்வொரு வைரக்கல்லும் அழகானது மட்டுமல்ல மிகவும் அரிதானதும் கூட!

உம்மிடி குடும்பத்தின் 'VBC ஜூவல்லரி'...

பாரம்பரிய நகைகளுக்கு பெயர்பெற்ற உம்மிடி குடும்பத்தைச் சேர்ந்த VBC ஜூவல்லரி துவங்கப்பட்ட ஆண்டு 1900. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வைர, தங்க, வெள்ளி நகைகளை வழங்கிவரும் VBC-யின் தரத்தை அவர்களின் வாடிக்கையாளர்கள் நன்கு அறிவார்கள். ஐந்து தலைமுறைகளாக நகைகளை வழங்கிவரும் VBC தற்போதைய டிரெண்டிற்கு தகுந்தவாறு பிளாட்டினம், நவமணிகள் மற்றும் கார்ப்பரேட் பரிசுகளுக்கு உகந்த நகை வகைகளையும் தயாரித்துவருவது குறிப்பிடத்தக்கது. மணப்பெண்ணுக்கு உரிய கலெக்ஷன்ஸ், பாரம்பர்ய நகைகள், எடை குறைந்த கலெக்ஷன்ஸ், விலை குறைவான பட்ஜெட் கலெக்ஷன்ஸ், கஸ்டமைஸ்டு ஜூவெல்லரி என நாம் விரும்பிய நகைகளை தி.நகர் ஜி.என். செட்டி ரோடு VBC-யில் பெறலாம்.

VBC-யின் அசத்தல் பரிசுப்போட்டி!

அழகிய வைர பெண்டென்ட் ஒன்றை உங்கள் வசமாக்கிக்கொள்ள விருப்பமா? உங்களுக்காகவே 'கெஸ் & வின் - Guess & Win' பிரம்மாண்டப் பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது VBC ஜூவெல்லரி. வைர நகை ஒன்றின் படம் உங்களிடம் காட்டப்படும், படத்தில் கொடுக்கப்பட்டுள்ள நகையிலுள்ள வைரத்தின் எடை எவ்வளவு 'காரட்'(Carat) என்பதை சரியாகக் கணித்து அட்டவணையில் குறிப்பிட வேண்டும். மேலும், வைரத்தைக் குறித்த அழகிய சுலோகன் ஒன்றையும் எழுதி குறிப்பிடவும். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதலாம். சுலோகன் உங்களுடையதாக இருக்கவேண்டும், இணையத்தில் இருந்தோ, இதர இடங்களில் இருந்தோ எடுக்கப்பட்ட விளம்பர / வரி வாசகங்களைப் பயன்படுத்தக்கூடாது. நகையின் எடை (எவ்வளவு காரட்), சுலோகன் மற்றும் உங்களின் விவரங்களைப் படிவத்தில் பூர்த்தி செய்யவும். போட்டியில் நீங்கள் கலந்துகொண்டதற்கான SMS உங்களுக்கு அனுப்பப்படும்.

போட்டியில் படத்தில் காட்டப்படும் அசல் வைர நகை VBC ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சரியான விடையைச் சொல்லி பரிசு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவோர் நேரடியாக, நம்பர் 78, ஜி.என்.செட்டி ரோடு, தி.நகர் வாணி மஹால் அருகில் உள்ள VBC ஷோரூமுக்குச் சென்று வைர நகையை நேரில் பார்வையிட்டும் உங்களின் விடையைப் பதிவு செய்யலாம்! 


 
'காரட்' என்றால் என்ன?

நகை வியாபாரிகள் வைரத்தை 'காரட் - Carat' அளவீடுகளிலேயே குறிப்பிடுகின்றனர். பொருட்களின் எடையை கிலோகிராமில் கணக்கிடுவது போல வைரத்தின் எடையைக் கணக்கிடும் அளவீடுதான் காரட். ஒரு காரட் என்பது 200 மில்லிகிராமுக்கு சமமாகும். ஒரு காரட்'டை நூறு புள்ளிகள் (Points) அல்லது சென்ட்களாக (Cents) பிரித்து கணக்கிடுகின்றனர். உதாரணத்துக்கு 1.09 காரட் மதிப்புள்ள ஒரு வைரம் என்பது 1 காரட் & 9 சென்ட்கள் (அல்லது) புள்ளிகள் ஆகும்.

அசத்தல் பரிசுகள் காத்திருக்கின்றன...

வைரத்தின் எடையை சரியாகக் கணித்து முதல் பரிசு வெல்பவருக்கு 'வைர பெண்டன்ட்' பரிசாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாது, டாப் 11 போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசாக 'தங்க நாணயம்' வழங்கப்படும். மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும், VBC ஷோரூமில் நகை வாங்கும்போது 'சிறப்புத் தள்ளுபடி'யும் உண்டு. தங்க நகைகளுக்கு கிராமுக்கு ரூ. 75 தள்ளுபடி, வைர நகைகளுக்கு 7.5% தள்ளுபடி மற்றும் வெள்ளி நகைகள் கிலோவுக்கு ரூ. 750 தள்ளுபடியை வழங்குகிறது VBC. போட்டியில் கலந்துகொண்டதற்கான SMS-ஐக் காட்டி, இந்தத் தள்ளுபடியைப் பெற்றுக்கொள்ளலாம்!

போட்டியில் இப்போதே கலந்துகொள்ள, விவரங்களை பெற கீழே இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்க...

participate here

நீங்க எப்படி பீல் பண்றீங்க