`ஏவிய 10 விநாடிகளில் தாக்கிய மின்னல்' - வைரலாகும் ரஷ்ய ராக்கெட் லாஞ்ச்! #Video | Lightning hits rocket shortly after launch-Viral Video

வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (29/05/2019)

கடைசி தொடர்பு:10:29 (29/05/2019)

`ஏவிய 10 விநாடிகளில் தாக்கிய மின்னல்' - வைரலாகும் ரஷ்ய ராக்கெட் லாஞ்ச்! #Video

ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி (Soyuz-2.1b) என்னும் ராக்கெட் Glonass-M என்னும் செயற்கைகோளுடன் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. அன்று வானிலை சற்றே மோசமாக இருந்தது. இருப்பினும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணி தள்ளிவைக்கப்படவில்லை. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது. 

மின்னல் தாக்கிய ராக்கெட்

P.C: Twitter/Rogozin

இதை உறுதிசெய்த அதிகாரிகள், ``ராக்கெட்டுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, மிஷன் சக்சஸ்தான்" என்று தெரிவித்திருக்கின்றனர். `மின்னல் எங்களுக்கு ஒரு தடை அல்ல என்பதற்கு இதுவே சான்று' என்று ரஷ்யாவின் Roscosmos விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் இயக்குநர் ட்விட்டரில் தெரிவித்தார். செயற்கைகோளும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இதன் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல்.

இப்படி ராக்கெட்கள் தாக்குவது இது முதல்முறை இல்லை. இன்னொரு புகழ்பெற்ற சம்பவமும் இருக்கிறது. 1969-ல் நாசாவின் Apollo 12 மிஷனில் பயன்படுத்தப்பட்ட Saturn V ராக்கெட் ஒன்றை இருமுறை மின்னல் தாக்கியது. இது மனிதர்களைக் கொண்டுசென்ற ராக்கெட். இது சிறிய தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அப்போதும் பெரிய பாதிப்புகள் இல்லை. ராக்கெட்களை கட்டமைக்கும் விஞ்ஞானிகள் அதில் இருக்கும் உலோகங்கள் மின்னல்களை ஈர்க்கும் என்பதை அறிந்து அதற்கேற்றபடியே அவற்றை வடிவமைக்கின்றனர். இதனால் மின்னல்கள் ராக்கெட்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது கிடையாது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க