`ஆடி'யும் வேண்டாம் `லக்ஸூரி'யும் வேண்டாம்!'- ஜேசிபியை கொண்டாடும் நெட்டிசன்கள்! #JCBKIKHUDAYI | JCB trending in Social media pages

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (29/05/2019)

கடைசி தொடர்பு:18:04 (29/05/2019)

`ஆடி'யும் வேண்டாம் `லக்ஸூரி'யும் வேண்டாம்!'- ஜேசிபியை கொண்டாடும் நெட்டிசன்கள்! #JCBKIKHUDAYI

சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில், கடந்த 48 மணி நேரமாக #JCBKIKHUDAYI (ஜேசிபி தோண்டிக்கொண்டிருக்கிறது) எனும் ஹேஷ்டேக், வைரலாகப் பரவி வருகிறது. ஜேசிபி இயந்திரத்தின் படங்களோடு பலவிதமான மீம்களும் ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. யூ-டியூபில் கூட ஜேசிபி மண்ணைத் தோண்டுவது போல இருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்துவருகிறார்கள் மக்கள். திடீரென இந்தியாவில் எதனால் #JCBKIKHUDAYI ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது, இதன் பின்னணி என்ன என்பதற்கான காரணம் தெரியாதது இந்த மீம்களுக்கிடையே சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. 

JCB இயந்திரம்

இதுமட்டுமல்ல, சன்னி லியோன் ஜேசிபி இயந்திரத்தின் மேல் நிற்பது போன்ற படமும் இந்த ஹேஷ்டேக்குடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ``ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற லக்ஸூரி கார்கள் எதுவும் வேண்டாம்...ஜேசிபியே போதும்'' என்றெல்லாம் பதிவுகளைச் செய்து வேடிக்கையான மீம்களைப் பகிர்கிறார்கள் சோஷியல் மீடியா மக்கள். இந்தியாவில் எர்த் மூவர்ஸ் செக்மென்ட்டில், அசைக்க முடியாத இடத்தை ஜேசிபி வைத்திருக்கிறது. இதனாலேயே டோஸர், எஸ்கலேட்டர் போன்ற டெக்னிக்கல் பெயர்களை மறந்து, ஜேசிபி என்ற பெயரே மக்கள் மனதில் நின்று ஜேசிபி நிறுவனத்துக்குப் பிரபலத்தையும் தேடித் தருகிறது. நம் நாட்டில் இன்றும் தெருக்களில் ஒரு ஜேசிபி இயந்திரம் பணியில் இருந்தால், அதை நின்று காண ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது! இதைச் சுட்டும் வகையில், தற்போது வைரலாகி வரும் #JCBKIKHUDAYI ஹேஷ்டேக், மக்களிடையே பல நாஸ்டாலஜி நினைவுகளைத் தூண்டும் விதத்தில் அமைந்திருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.

நன்றி தெரிவித்திருக்கும் ஜேசிபி நிறுவனம்

அரசியல்வாதிகள், நடிகர்கள், லைஃப்ஸ்டைல் என அனைத்தையும் ஜேசிபி இயந்திரத்தோடு ஒப்பிடப்பட்டு வரும் பதிவுகள் மற்றும் மீம்கள் குறித்து, தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ``தங்கள் மீது காட்டப்பட்டுள்ள அளவில்லாத அன்பிற்கு நன்றி" எனக் கடைசியாக ஜேசிபி நிறுவனமே ட்வீட் போட்டுவிட்டது. சில பல ஜேசிபி மீம்ஸ்களை காண இங்கே க்ளிக் செய்யுங்கள் - https://bit.ly/2XdtQDs