Published:Updated:

`முதல்ல உங்க ஹிஸ்டரியை டெலிட் பண்ணுங்க தம்பி!' - ஐஆர்சிடிசியின் `நச்' கலாய்

ட்விட்டரில் கேள்வி கேட்ட நபரைக் கலாய்த்துள்ளது ஐஆர்சிடிசி.

`முதல்ல உங்க ஹிஸ்டரியை டெலிட் பண்ணுங்க தம்பி!' - ஐஆர்சிடிசியின் `நச்' கலாய்

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக ஐஆர்சிடிசி செயலி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. டிக்கெட் கவுன்டர்களில் நின்று முன்பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில் இந்தச் செயலி கொண்டுவரப்பட்டது. இந்த ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவ்வப்போது கூகுள் விளம்பரங்கள் தெரியும். இதற்கிடையே, இப்படித் தெரிந்த விளம்பரங்களால் தனக்கு நேர்ந்த சோகத்தைப் பதிவிட்டு கலாய் வாங்கியுள்ளார் இளைஞர் ஒருவர். 

`முதல்ல உங்க ஹிஸ்டரியை டெலிட் பண்ணுங்க தம்பி!' - ஐஆர்சிடிசியின் `நச்' கலாய்

ஜார்கண்டின் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆனந்தகுமார் என்பவர், ஐஆர்சிடிசி ஆப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பெண்களின் உள்ளாடை தொடர்பான விளம்பரங்கள் தெரிந்துள்ளன. இந்த விளம்பரங்களால் கடுப்பான அவர், அந்த கூகுள் விளம்பரத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.  ``IRCTC டிக்கெட் புக்கிங் ஆப்பில் இப்படி மோசமான விளம்பரங்கள் அடிக்கடி தோன்றுவது எரிச்சலூட்டுகிறது" எனக் கூறி மத்திய ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே அமைச்சகம் மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றை டேக் செய்து பதிவிட்டார். 

`முதல்ல உங்க ஹிஸ்டரியை டெலிட் பண்ணுங்க தம்பி!' - ஐஆர்சிடிசியின் `நச்' கலாய்

இதற்கு ஐஆர்சிடிசி அளித்துள்ள பதில் நகைச்சுவையின் உச்சம் என்றே சொல்லலாம். ``IRCTC விளம்பரங்களை வழங்குவதற்காக Googles விளம்பரச் சேவை ADXஐப் பயன்படுத்துகிறது. பயனாளர்களின் குக்கீஸ் மற்றும் பிரௌசிங் ஹிஸ்டரியைப் பொறுத்து இந்த விளம்பரங்களானது வரும். எனவே தயவு செய்து முதலில் உங்கள் பிரௌசர் ஹிஸ்டரியை டெலிட் செய்யுங்கள். அப்போதுதான் இந்த விளம்பரங்கள் வருவதைத் தவிர்க்க முடியும்" எனக் கலாய்த்துள்ளது. ஐஆர்சிடிசியின் இந்தப் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு