`உங்களுக்கு ஓட்டுநர் குறைவான ரேட்டிங் தந்தால் போச்சு!' - ஊபர் எடுத்திருக்கும் அதிரடி | Driver rating can make a customer get out of Uber services

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/05/2019)

கடைசி தொடர்பு:16:16 (30/05/2019)

`உங்களுக்கு ஓட்டுநர் குறைவான ரேட்டிங் தந்தால் போச்சு!' - ஊபர் எடுத்திருக்கும் அதிரடி

ஊபர்

Feedback. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சொல்லுக்கு என்ன மதிப்பு என்றால், அது வெறும் கண்துடைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், டெக்னாலஜியின் வளர்ச்சி காரணமாக இப்போது நிலைமை மாறியிருக்கிறது. ஸ்விகி டெலிவரி பாயும், ஊபர் டிரைவரும் “ ரேட்டிங் கொடுத்துக்கங்க சார்” எனத் தொடர்ந்து கேட்கிறார்கள். அவர்கள் நடத்தையில் தவறிருந்தால், நாம் குறைந்த ரேட்டிங் தரலாம். இப்படி பலர் குறைந்த ரேட்டிங் தந்தால், அந்த எக்ஸ்க்யூட்டிவை நிரந்தரமாக விலக்கியும் வைக்கிறார்கள். இது, நமக்குத் தெரிந்த விஷயம். தெரியாத விஷயம் இன்றிருக்கிறது.

ஊபர் டிரைவருக்கு  நாம் ரேட்டிங் தருவதுபோல அவரும் நமக்கு ரேட்டிங் தரலாம். இதுவரை அந்த ரேட்டிங்குக்குப் பயனில்லாமல் இருந்தது. இனி, பயணிப்பவரும் குறைந்த ரேட்டிங் வாங்கினால், அவர்களைத் தடைசெய்ய ஊபர் முடிவுசெய்திருக்கிறது. ஓட்டுநர்களைத் தவறாகப் பேசுவது, அவர்களை காத்திருக்கவைப்பது, அதிகப் பயணிகளை ஏற்றச் சொல்லி கட்டாயப்படுத்துவது, மேப் சொல்லும் ரூட்டில் செல்லாமல் வேற ரூட்டில் போகச்சொல்வது எனப் பல விஷயங்களுக்காக ஓட்டுநர்களும் பயணிகளுக்கு ரேட்டிங் தரலாம். ஒரே மாதத்தில் இரண்டு ஓட்டுநர்களுக்கு மேல் பயணிக்கு குறைவான ரேட்டிங் தந்தால், அவர்கள் புரொஃபைல் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படுமென ஊபர் அறிவித்திருக்கிறது. இந்த மாற்றங்கள், ஊபர் அமெரிக்காவில் உடனடியாக அமலுக்கு வரும். நம்ம ஊருக்கு எப்போது எனத் தெரியவில்லை.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க