'நேசமணிக்காக நானும் ப்ரே பண்ணிக்கிறேன்' - வைரல் பேஜ் அட்மின்! | 'I also pray for Nesamani'-Viral page admin

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (30/05/2019)

கடைசி தொடர்பு:18:25 (30/05/2019)

'நேசமணிக்காக நானும் ப்ரே பண்ணிக்கிறேன்' - வைரல் பேஜ் அட்மின்!

ஒரு சிறிய ஃபேஸ்புக் கமென்ட்டில் பற்றிய நெருப்பு, மொத்த உலகையும் ஆட்கொண்டுள்ளது. 'யார் அந்த நேசமணி?' என வெளிநாட்டு மக்களும் கேட்கும் அளவுக்கு நம் மக்கள் இந்த விஷயத்தை ட்ரெண்ட் ஆக்கியிருக்கின்றனர். இப்படி வடிவேலு ட்ரெண்ட் ஆவது அவ்வப்போது நடப்பதுதான் என்றாலும், இந்த லெவல் ட்ரெண்டிங்கை எவருமே கணித்திருக்க முடியாது. வடிவேலுவை விடுங்கள், ஒரே கமென்ட்டில் பலரின் கவனத்தையும் பெற்றார், விக்னேஷ் பிரபாகரன். இப்படியிருக்க, இதற்கு விதை போட்ட ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் என்ன சொல்கிறார் தெரியுமா...

வைரல் பக்க அட்மின்

பாகிஸ்தானைச் சேர்ந்த சமியுல்லாவுக்கு முதலில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தன் பக்கத்திற்கு எப்படி திடீரென இத்தனை லைக்குகள், கமென்ன்டுகள் வருகிறதெனக் குழம்பியிருக்கிறார். பிறகுதான் ஒவ்வொன்றாகப் புரிந்துகொண்டு, 'நேசமணி' யார் என்பதைத் தெரிந்துகொண்டுள்ளார். லைவ்வில் வந்த அவர், ''நானும் சிவில் என்ஜினீயர்,  நெசமாணியும் சிவில் என்ஜினீயர். ஐ ஆல்சோ ப்ரே ஃபார் நெசமாணி'' என்றார். பலரும் இவருக்கு உண்மையிலேயே மேட்டர் என்னன்னு தெரியுமானு சந்தேகப்பட்டு கமென்ட் செய்ய, 'ப்ரண்ட்ஸ்' படம்,  அவர் நல்ல நகைச்சுவை நடிகர்' என்று தெளிவாக விளக்கம் கொடுக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க