இனி ஒரே மீட்டிங்கில் காரை விற்கலாம்! இது #ByeByeDrive | Its now easy to sell your used cars in a single visit.

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (31/05/2019)

கடைசி தொடர்பு:16:04 (01/06/2019)

இனி ஒரே மீட்டிங்கில் காரை விற்கலாம்! இது #ByeByeDrive

வீட்டுக்கு அடுத்தபடி, நிறைய பணத்தை செலவு செய்து வாங்கப்படுவது கார். ஒரு கார் பிரியராக இருந்தால், அதனை தினமும் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்வது, காருக்குள் தாம் விரும்பியபடி பல மாற்றங்கள் செய்வது, டீ குடிப்பது முதல் நீண்ட ட்ரிப் செல்வது வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் காரை எடுத்துக்கொண்டு பயணம் போவது, தனக்குப் பிடித்த நபருடன் நீண்ட சாலைப் பயணம் மேற்கொள்வது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது, டிராஃபிக் இல்லாத ரோட்டில் இனிமையான பாடலை ஒலிக்கவிட்டு, அதைத் தானும் பாடிக்கொண்டே ரசித்து பயணம் மேற்கொள்வது என நம் காருக்கும் நமக்குமான பந்தம் என்பது மிகவும் உணர்ச்சிகரமானது. முதல் காதலைப் போல தங்களது முதல் காரையும் யாரும் மறப்பதில்லை!

 

கார் விற்பனை செய்ய வேண்டுமா?

இப்படிப் பல மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்த காரை விற்க வேண்டிய அவசியம் சிலருக்கு ஏற்படலாம். இதுநாள் வரை குடும்பத்தில் ஒரு நபர் போல இருந்துவந்த காரை யாரோ பெயர் தெரியாத நபரிடம் ஒப்படைப்பது என்பது நிச்சயம் துன்பமான விஷயம்தான். இன்னொருபுறம் நாம் காரை விற்க நினைக்கும் நேரத்தில், சரியான ஆட்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். அவசரத்துக்காக காரை விற்க நினைக்கும்போது நம் காருக்கு உண்டான சரியான மதிப்பிலான தொகை முழுமையாக கிடைப்பதில்லை என்பது இன்னுமொரு வருத்தத்துக்குரிய விஷயம்!

உதவும் #CARS24 நிறுவனம்!

CARS24 நிறுவனம் உங்களின் காரை ஒரே மீட்டிங்கில் வாங்கிக்கொள்கிறது. சென்னையில், அண்ணா நகர், பெசன்ட் நகர், ஜி.எஸ்.டி. ரோடு, முகப்பேர் மேற்கு, பெருங்குடி ஓ.எம்.ஆர்., போரூர், தி.நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய 8 இடங்களில் செயல்பட்டு வருகிறது CARS24. 

 

 

பொதுவாக நாம் காரை விற்க நினைத்து விளம்பரம் செய்யும்போது, நாம் எதிர்பாராத நேரத்தில் நிறைய அழைப்புகள் வரும், நாம் கேட்கும் விலையைவிட கம்மியாகவே பேரம் பேசுவார்கள். மேலும், ஒரு காரை முறையாக விற்க நினைக்கும்போது ஆர்.சி., இன்ஷ்யூரன்ஸ் ஆகியவற்றை காரை வாங்க நினைப்பவருக்கு கைமாற்றம் செய்வதற்கு பல நாட்கள் ஆகலாம். இதனால், நாம் நினைத்த நேரத்துக்குள் நமக்குப் பணம் கிடைக்குமா என்பது சந்தேகமே! CARS24 இந்த சிரமமான அனைத்து செயல்முறைகளையும் மிகவும் சுலபமாக்கிவிட்டது...

உங்கள் காரின் மாடல், வயது, சர்வீஸ் விவரங்கள், ஓடிய கிலோமீட்டர் கணக்கு ஆகியவற்றைக் கணக்கிட்டுத் துல்லியமான சிறந்த விற்பனைத் தொகையை வழங்குகிறது CARS24. இதுமட்டுமல்லாது நம்முடைய காரின் கண்டிஷனை அலசி ஆராய்ந்து நியாயமான இறுதித் தொகையை முடிவு செய்கிறது. பழைய கார்களை வாங்கும் முறையான சந்தையில் கடைப்பிடிக்கப்படும் மிகச் சரியான விலையாக இது இருக்கிறது.

உடனுக்குடன் கைக்கு வரும் பணம்!

உங்களின் காரை மதிப்பிட்டவுடன், CARS24 உடனான உங்கள் முதல் சந்திப்பிலேயே விற்பனையை முடித்துவிடலாம் என்பதே சிறப்பு. இதுமட்டுமல்லாது காரை விற்பனை செய்த உடனேயே உங்களுடைய பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. இதனால் தேவையற்ற அலைச்சலோ பயமோ தேவையில்லை. இதுமட்டுமல்லாது கார் விற்பனைக்குப் பின் காரின் உரிமையை மாற்ற RTO அலுவலகத்துக்கு மாறி மாறி நாம் அலையத் தேவையில்லை. A டு Z டாக்குமெண்டேஷன் தொடர்பான அனைத்து வேலைகளையும் CARS24 பார்த்துக்கொள்கிறது, இதற்கென தனிக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

பழைய கார் விற்பனையல்ல, இது #ByeByeDrive

நமக்கு சொந்தமான, நமக்குப் பிடித்த காரை விற்க நினைக்கும்போது தேவையற்ற கவலையும் குழப்பமும் இனி வேண்டாம்! உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட உங்களின் காரை 'விற்கப்போகிறேன்' எனச் சொல்ல வேண்டாம், 'என் காருடன் ஒருமுறை #பைபைடிரைவ் - #ByeByeDrive செல்கிறேன்' எனக் கூறுங்கள்! வெள்ளித்திரை பிரபலம் டி.டி. இணைந்துள்ள #CARS24-இன் புதிய #ByeByeDrive கேம்பயினைக் கீழ்க்கண்ட வீடியோவில் பார்க்கலாம்!

 


கார் விற்பனை தொடர்பாக,மேலும் தகவல்களுக்கு அணுகவும், CARS24  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க