109 லட்சம் கார்களை விற்பனை செய்த ஃபோக்ஸ்வாகன் குழுமம்! #VikatanInfoGraphics | The World's Largest Car Manufacturers

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (01/06/2019)

கடைசி தொடர்பு:14:05 (01/06/2019)

109 லட்சம் கார்களை விற்பனை செய்த ஃபோக்ஸ்வாகன் குழுமம்! #VikatanInfoGraphics

லக அளவில் பொருளாதார வளர்ச்சியானது அசூர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் காலத்துக்கேற்ப, தானியங்கி கார், பேட்டரி கார் எனச் செயற்கை நுண்ணறிவுடன் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய மாற்றங்களையும் செய்துவருகின்றன.

கார்

உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான கார்கள், பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஜெர்மனி நாட்டின் புகழ்பெற்ற ஃபோக்ஸ்வாகன் கார் உற்பத்தி நிறுவனம்தான் உலகிலேயே அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம். ஃபோக்ஸ்வாகன் குழுமமானது கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 109 லட்சம் கார்களை விற்பனை செய்து டாப் 10 கார் உற்பத்தியாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ஃபோக்ஸ்வாகன்

அதேபோல், டொயோட்டா நிறுவனம் 106 லட்சம் கார்களை விற்பனை செய்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 83.8 லட்சம் கார்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து 60 லட்சம் கார்களை விற்பனை செய்த ஃபோர்டு நிறுவனம் நான்காவது இடத்திலும், 55.1 லட்சம் கார்களை விற்பனை செய்த நிஸான் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 53.2 லட்சம் கார் விற்பனையோடு ஹோண்டாவும், 48.4 லட்சம் கார் விற்பனையோடு ஃபியட்-கிரைஸ்லரும் உள்ளது. டாப் 10 கார் உற்பத்தியாளர்களின் பட்டியலில் எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் 38.8 லட்சம் கார்களை விற்பனை செய்து ரெனால்ட் நிறுவனம் மற்றும் PSA குழுமம் உள்ளது. இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் இந்தப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. மாருதி சுஸூகி நிறுவனம்  2018-ல் உலகளவில் 33.3 லட்சம் கார்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

டாப் உற்பத்தியாளர்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க