டெஸ்ட்டிங்கில் தார் எஸ்யூவியின் லேட்டஸ்ட் மாடல்... Hard top/ Soft top ஆப்ஷன்களோடு! | Mahindra Found Testing Two Versions of Thar SUV

வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (01/06/2019)

கடைசி தொடர்பு:18:46 (01/06/2019)

டெஸ்ட்டிங்கில் தார் எஸ்யூவியின் லேட்டஸ்ட் மாடல்... Hard top/ Soft top ஆப்ஷன்களோடு!

மஹிந்திராவின் மற்ற எஸ்யூவிகளான ஸ்கார்ப்பியோ, TUV3OO ஆகியவை கட்டமைக்கப்படும் Gen 3 லேடர் சேஸியில்தான் புதிய தாரும் தயாரிக்கப்படும்.

டெஸ்ட்டிங்கில் தார் எஸ்யூவியின் லேட்டஸ்ட் மாடல்... Hard top/ Soft top ஆப்ஷன்களோடு!

அடுத்த தலைமுறை தார் எஸ்யூவி, பரபரப்பான டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இது காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இதன் ஸ்பை போட்டோக்கள் இணையத்தில் குவிந்தவண்ணம் உள்ளன. இந்த நேரத்தில் தார் எஸ்யூவியின் வரலாற்றிலேயே முதன்முறையாக, வழக்கமான Soft Top உடன் Hard Top ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளது. இவை இரண்டுமே சென்னையின் நெடுஞ்சாலைகளில் தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கின்றன. அவற்றைப் படம்பிடித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எம்.அர்ஜுன். இதில் புதிய ஸ்கார்ப்பியோ மற்றும் XUV5OO-ல் பொருத்தப்பட உள்ள 2.0 லிட்டர் BS-6 டீசல் இன்ஜினே (140bhp) இருக்கும்.

தார்

ஜீப் ரேங்ளர் போலவே, புதிய தாரில் இருக்கப்போகும் Hard Top, கழற்றி மாட்டக்கூடிய வகையிலேயே இருக்கும். இதனால் நம் ஊரில் நிலவும் அதிகப்படியான வெப்பம் மற்றும் மழைக்காலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய திறனை, இந்த எஸ்யூவி பெறக்கூடும். இதனால் ஆஃப்ரோடு மட்டுமல்லாது, ஆன்ரோட்டிலும் பயன்படுத்தக்கூடிய வாகனமாக புதிய தார் மாறுவதற்கான சாத்தியமும் இருக்கிறது. Hard Top காரணமாக, வெளிச்சத்தம் காருக்குள்ளே கேட்பதும் குறையலாம். காலத்துக்கேற்ப இதில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம். ஒருவேளை இது சாத்தியமானால், தற்போதைய XUV5OO-ல் இருக்கும் 2.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், புதிய தாரில் பயன்படுத்தப்படலாம்.

மஹிந்திரா

மஹிந்திராவின் மற்ற எஸ்யூவிகளான ஸ்கார்ப்பியோ, TUV3OO ஆகியவை கட்டமைக்கப்படும் Gen 3 லேடர் சேஸியில்தான் புதிய தாரும் தயாரிக்கப்படும். இதில் இடம்பெறும் பம்பர்கள் மற்றும் பாடி பேனல்கள் அனைத்துமே புதிது. மேலும் அகலமான டிராக், குறைவான சஸ்பென்ஷன் டிராவலுடன்கூடிய முன்பக்க சஸ்பென்ஷன் என ஆன்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்றபடி இந்த எஸ்யூவி மாற்றியமைக்கப்படலாம். இதனால் பின்பக்கத்தில் இன்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் இருக்காது எனத் தெரிகிறது. Side Facing பின்பக்க சீட்டுக்குப் பதிலாக, சீட் பெல்ட் உடனான Front Facing சீட்களே இருக்கும். அகலமான வீல் ஆர்ச்கள், தாரின் கட்டுமஸ்தான தோற்றத்துக்குக் கைகொடுக்கின்றன. ஃபோர்ஸ் கூர்க்கா உடன் போட்டிபோடும் வகையில் கெத்தாகக் களமிறங்கப்போகும் புதிய தாரில், தனது குறைகளைக் களைந்துவிடும் எனலாம். 

எஸ்யூவி

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, கேபின் பிரீமியமாக இருக்கும் என நம்பலாம். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது டூயல் டோன் ஃபினிஷ்கொண்ட இன்டீரியரில், 2 Din மியூசிக் சிஸ்டம் அல்லது டச் ஸ்க்ரீன் சிஸ்டம் பயன்படுத்தப்படலாம். தவிர, ஆடியோ கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏசி கன்ட்ரோல்கள் ஆகியவை TUV3OO-ல் இருந்து பெறப்படலாம். தாரின் பொசிஷனிங்குக்கு ஏற்ப, அதில் மேனுவலாக இயக்கக்கூடிய 4 வீல் டிரைவ் சிஸ்டம் - Low Range செலெக்டர் - டிஃப்ரென்ஷியல் லாக் இடம்பெறும். விரைவில் அமலுக்கு வரவிருக்கும் விதிகளைக் கருத்தில்கொண்டு, டிரைவர் காற்றுப்பை - ABS - EBD - சீட் பெல்ட் Pretensioner - ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் - பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் - க்ராஷ் டெஸ்ட்டுக்கு உகந்த கட்டுமானம் ஆகியவற்றை புதிய தார் கொண்டிருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்