உங்கள் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை எவ்வளவு பெய்யும்? இங்கே தெரிஞ்சுக்கலாம்! #VikatanInfographics | Only 60% of Southwest Monsoon this year

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (03/06/2019)

கடைசி தொடர்பு:19:14 (03/06/2019)

உங்கள் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை எவ்வளவு பெய்யும்? இங்கே தெரிஞ்சுக்கலாம்! #VikatanInfographics

இந்த வருடம் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தளவுக்கு தென்மேற்குப் பருவமழை பெய்யும்?

உங்கள் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை எவ்வளவு பெய்யும்? இங்கே தெரிஞ்சுக்கலாம்! #VikatanInfographics

லக வெப்பமயமாதல், காடுகள் அழிப்பு, மரங்களை வெட்டுதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, தட்பவெப்பநிலை மாற்றம் எனப் பல்வேறு காரணங்களால் சரியான நேரத்தில் பெய்ய வேண்டிய மழை காலங்கடந்து பெய்தும், சில நேரங்களில் மழையே பெய்யாமல் போகக்கூடிய சூழலும் நிலவிவருகிறது. தமிழகத்தில் இயற்கையை அழிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, முன்பிருந்ததைவிட தற்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. 

தண்ணீர்

கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை இரண்டும் பொய்த்துப் போய்விட்டன. அதனால் ஏற்பட்ட வறட்சி, கடந்த ஆண்டின் பருவமழைக் காலம் தொடங்கி இந்த ஆண்டு கோடைக்காலம் வரை நீடித்தது. தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எவ்வளவு மழை இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள பயிர் மேலாண்மை இயக்கத்தின் ஆய்வுமுடிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் மாவட்டவாரியாக இங்கே. உங்கள் மாவட்டத்தில் எவ்வளவு மழைபெய்யும் எனக் கணிக்க, மாவட்டத்தின் மீது க்ளிக் செய்யவும்.

 

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையானது ஜூன் மாதம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரை மழை பொழியும். தற்போது பெறப்பட்டுள்ள முன்னறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 60 சதவிகிதம் மழையானது பொழிய வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், நீலகிரி, திருச்சி, கடலூர், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் சராசரி மழையளவைக் காட்டிலும் 10 சதவிகிதம் வரை அதிகமாக மழைப்பொழிவு இருக்கும். மேலும், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவாக மழைப்பொழிவு இருக்கும். கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேலூர், பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய 10 மாவட்டங்களில், சராசரி மழையளவைக் காட்டிலும், 5.1 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை மழைப்பொழிவு குறைவாக 

பருவமழை

திருப்பூர், தருமபுரி, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவைக் காட்டிலும் 15.1 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் குறைவாக மழை பொழியும். தூத்துக்குடியில் 20.1 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை மழைக் குறைவாக இருக்கும். அதேபோல், ஈரோடு, கரூர், விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவைவிட 10.1 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை குறைவான மழைப்பொழிவு இருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்