ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்... சொகுசும் அட்வென்சரும் கலந்து செய்த கலவை! | Rolls Royce Unveils its First SUV, The Cullinan in Chennai!

வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (04/06/2019)

கடைசி தொடர்பு:19:05 (12/06/2019)

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்... சொகுசும் அட்வென்சரும் கலந்து செய்த கலவை!

‘Architecture of Luxury’ எனப் பெயர்பெற்ற அலுமினிய Space Frame-ல்தான் இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது Mark-VII Phantom காரின் ப்ளாட்ஃபார்மைவிட 30% அதிக உறுதித்தன்மையைக் கொண்டிருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்... சொகுசும் அட்வென்சரும் கலந்து செய்த கலவை!

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய மகாராஜாக்களின் காலம் முதல் ட்விட்டரில் டிரெண்டிங்கில் உள்ள நேசமணியின் காலம் வரை, பிரீமியம் லக்ஸூரி கார்கள் என்றாலே நினைவுக்கு வருவது ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமே. உலகின் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகக் கருதப்படும் இவை, சாமானியனுக்கு என்றுமே எட்டாத கனவுதான். பாரம்பர்யமான டிசைனாக இருந்தாலும், கம்பீரமான தோற்றத்தில் கவரும் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், நீண்ட பானெட் பகுதியைக்கொண்டிருக்கும். 

கல்லினன்

இதனாலேயே ராயலான கேபினுடன்கூடிய நடமாடும் மினி மாளிகையாகத் திகழ்கிறது ரோல்ஸ் ராய்ஸ். இந்தியாவில் Phantom, Ghost, Dawn, Wraith, Black Badge போன்ற பிரீமியம் லக்ஸூரி செடான்களின் வரிசையில், தற்போது சொகுசுடன் அட்வென்சரையும் சேர்த்து வெளிவந்திருக்கிறது கல்லினன். ரோல்ஸ் ராய்ஸின் முதல் எஸ்யூவி மற்றும் 4WD கொண்ட காராக வந்திருக்கும் இது, கடந்த ஆண்டு இறுதியில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் பெரிய மற்றும் காஸ்ட்லி வைரக்கல்லான Cullinan (3100 காரட்) அடிப்படையாகக்கொண்டே, இந்த லக்ஸூரி எஸ்யூவிக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. `Effortless Everywhere' என்பதே கல்லினனின் கோட்பாடு.

டிசைன் மற்றும் வசதிகள்

ரோல்ஸ் ராய்ஸ்

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கே உரித்தான Yacht பாணியிலான டிசைன், கல்லினனின் கட்டுமஸ்தான தோற்றத்துக்குத் துணை நிற்கிறது. காரின் பாரம்பர்யமிக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்லால் ஆன Pantheon கிரில் மற்றும் அதற்கு மேலே உள்ள Spirit of Ecstacy லோகோ, முன்பக்கத்தைப் பிரமாண்டமானதாக மாற்றுகிறது. 21 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் மெலிதான LED Laser புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், அதற்கு செம பொருத்தம். இன்டீரியரில் Tan Box Grain லெதர் மற்றும் Wood வேலைப்பாடுகள் உள்ளன. காரின் சாவிக்குக்கூட லெதர் உண்டு! 12 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் 18 ஸ்பீக்கர்ஸ், In-Built வைஃபை, பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் இருப்பது பெரிய பிளஸ். ஃபுல் டிஜிட்டல் மீட்டரில் டேக்கோமீட்டருக்குப் பதிலாக Power Reserve மீட்டரே இருக்கிறது. இது ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் பிரத்யேகமாக இருப்பது. 560 லிட்டர் பூட் ஸ்பேஸ், நீண்ட தூரப் பயணங்களுக்குத் தோள்கொடுக்கும்.

Pantheon Grille

இன்னும் இடவசதி வேண்டும் என்றால், பின்பக்க சீட்களை எலெக்ட்ரிக்கலாக மடக்கினால் 1930 லிட்டர் வரை லக்கேஜ் ஸ்பேஸ் கிடைக்கிறது. 4 சீட்டர் மற்றும் 5 சீட்டர் ஆப்ஷன்களில் கல்லினன் எஸ்யூவி வருகிறது. `The Clasp' என அழைக்கப்படும் ஸ்ப்ளிட் டெயில்கேட்டில், எலெக்ட்ரிக்கலாக 2 பிக்னிக் சேர்கள் (Viewing Suite) அல்லது பொருள்கள் வைக்க இடம் (Recreation Module) ஆப்ஷனலாக வருகின்றன. 1930-களில் விற்பனை செய்யப்பட்ட D-Back காரை நினைவுகூரும்படியாக, Coach விதத்தில் கதவுகளைக்கொண்டிருக்கிறது கல்லினன். ரோல்ஸ் ராய்ஸ் சொந்தமாகத் தயாரித்திருக்கும் ஆடியோ சிஸ்டம், வேற லெவல் பாஸ்! கதவுகளில் பாட்டில்/குடை வைக்க இடம், காரின் பின்பக்க இருக்கைக்கு டிஜிட்டல் ஸ்க்ரீன், ஃபிரிட்ஜில் மதுபான வகை/ கண்ணாடி டம்ளர் ஆகியவை உண்டு.

இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள்

டேஷ்போர்டு

பனிப்பிரதேசம், மலைப்பகுதி, அரேபியப் பாலைவனம் எனப் பலவிதமான தட்பவெப்ப நிலை மற்றும் நிலப்பரப்புகளில் கல்லினனை ரஃப் அண்டு டஃப்பாக டெஸ்ட் செய்திருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். அதிக வீல்பேஸ், உயரமான கிரவுண்டு கிளியரன்ஸ் என ஒரு எஸ்யூவிக்கான அனைத்து தேவைகளையும் இது பூர்த்திசெய்துள்ளது. `Architecture of Luxury’ எனப் பெயர்பெற்ற அலுமினிய Space Frame-ல்தான் இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது Mark-VII Phantom காரின் பிளாட்ஃபார்மைவிட 30% அதிக உறுதித்தன்மையைக்கொண்டிருக்கிறது. கல்லினனில் பொருத்தப்பட்டிருக்கும் 6.75 லிட்டர் - V12 ட்வின் டர்போ - பெட்ரோல் இன்ஜின், 563bhp@5,000rpm பவர் மற்றும் 85kgm@1,600rpm டார்க் - 341g/CO2 மாஸை வெளிப்படுத்துகிறது.

ரியர் ஏசி வென்ட்கள்

ZF நிறுவனத்தின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நீங்கள் செல்லும் திசை மற்றும் இடத்துக்கு ஏற்ப இயங்கும் என்பது வாவ்! குறைவான வேகத்திலேயே அதிக செயல்திறன் கிடைப்பதால், 2,660 கிலோ எடையுள்ள கல்லினன், 0 - 100கிமீ வேகத்தை வெறும் 5.2 விநாடிகளிலேயே எட்டிவிடுகிறது. மேலும் அதிகபட்சமாக 250கிமீ வரை (Electronically Limited) இந்த எஸ்யூவி செல்கிறது. இந்த நேரத்திலும் எதிர்காற்று/இன்ஜின்/டயர் சத்தம் காருக்குள்ளே கேட்காது! ஆன்ரோடு டிரைவிங்கிலிருந்து ஆஃப்ரோடிங்குக்கு உடனடியாக ஷிஃப்ட் ஆகும்படியான Everywhere மோடு & டிராக்‌ஷன் கன்ட்ரோல் இஸ் வெரி நைஸ். 540மிமீ ஆழத்தில் செல்லக்கூடிய திறனைக்கொண்டிருக்கிறது கல்லினன் (இது பென்ட்லி பென்டாய்காவைவிட 40மிமீ அதிகம்).

பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விலை

கதவு

ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான காற்றுப்பை, ABS, EBD, க்ரூஸ் கன்ட்ரோல், Collision அலர்ட், All Side 4 கேமரா & ரிவர்ஸ் கேமரா - சென்சார், சாலையைக் கவனித்து சஸ்பென்ஷனை இயக்கும் Flag bearer Stereo கேமரா சிஸ்டம், Hi-Res Heads Up Display, எலெக்ட்ரிக்கலாக கன்ட்ரோல் செய்யப்படும் டேம்பர்கள், 4 வீல் ஸ்டீயரிங், 48V Anti Roll சிஸ்டம் எனப் பாதுகாப்பு அம்சங்களுக்குப் பஞ்சமில்லை. ஆஃப்ரோடு மோடிலும் கார் ஓட்டுநரின் கன்ட்ரோலில் இயங்குவதற்கான Self-Levelling ஏர் சஸ்பென்ஷன் இதில் இருக்கிறது. 4 வீல் டிரைவ் இருப்பதால், 50/50 விகிதத்தில் இன்ஜின் பவர் சிறப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. முன்னே சொன்ன சஸ்பென்ஷன் செட்-அப் உடன் Full எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் சேரும்போது, கல்லினனின் கையாளுமை நச் ரகம். இவ்வளவு பெரிய எஸ்யூவியில் (5.3 மீட்டர் நீளம், 2.1 மீட்டர் அகலம், 1.8 மீட்டர் உயரம், 3.3 மீட்டர் வீல்பேஸ்) பாடி ரோல் மிகச் சொற்பமாகவே இருக்கிறது.

டிரைவ் மோடு

பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்குச் சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், 2,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன்கூடிய தொழிற்சாலையை GoodWood நகரத்தில்கொண்டிருக்கிறது. விமானங்களுக்கான இன்ஜின் மற்றும் Propulsion System-க்கும் இந்த நிறுவனம் பெயர்பெற்றது. கோடிகளில் புரளும் முதலாளிகளுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் சொந்தம் என்பதுபோல, 6.95 கோடி ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளிவந்துள்ளது கல்லினன். இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் இதற்கு போட்டியே இல்லை எனச் சொல்லிவிடலாம். ஆனால் பர்ஃபாமன்ஸ் ஏரியாவில் பென்ட்லி பென்டாய்கா W12, லம்போர்கினி உரூஸ் போன்ற எஸ்யூவிகள், கல்லினனுக்கு டஃப் கொடுக்கலாம்.

டெயில் லைட்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்