IQ டெஸ்ட்டில் அபாரம் - ஐன்ஸ்டீனையும், ஸ்டீபன் ஹாக்கிங்கையும் பின்னுக்குத் தள்ளிய 11 வயது மாணவி! | 11 year old girl beats Einstein and Hawking in IQ test

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (06/06/2019)

கடைசி தொடர்பு:14:40 (06/06/2019)

IQ டெஸ்ட்டில் அபாரம் - ஐன்ஸ்டீனையும், ஸ்டீபன் ஹாக்கிங்கையும் பின்னுக்குத் தள்ளிய 11 வயது மாணவி!

11 வயதான  ஈரானிய உயர்நிலைப் பள்ளி மாணவி மென்சா, IQ சோதனையில் 162 மதிப்பெண்கள்  பெற்றுள்ளார்.  இதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிடப்போகிறது என்கிறீர்களா?  ஐன்ஸ்டீன் மற்றும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்கைவிடவும் இந்த மதிப்பெண்கள் அதிகம். மென்சா IQ சோதனை, நன்கு அறியப்பட்ட புகழ்பெற்ற அறிவுத் திறனை அறியும் சோதனையாகும். சராசரி IQ ஆனது 110 - 115 வரை இருக்க வேண்டும். இந்தச் சோதனையில் அதிக மதிப்பெண்கள் பெற்றால், மென்சாவின் உறுப்பினராவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஈரானிய முன்னணி பக்கத்தின்படி மென்சா சோதனையில்  ஒரு குறிப்பிட்ட கணநேரத்திற்குள் பதில் அளிக்கப்பட வேண்டும், கொடுக்கப்பட்ட வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் அவரின் திறனுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஐன்ஸ்டீன்

சமீபத்தில், ஆக்ஸ்ஃபோர்டில் மென்சா IQ சோதனையை நடத்தியது.  140 தான்  'ஜீனியஸ்  பென்ச் மார்க்' என்ற நிலையில் , 11 வயதான தாரா ஷெரிஃபி என்னும் ஈரானிய மாணவி இந்தச் சோதனையில் 162 புள்ளிகள் பெற்றுள்ளார். இது எவ்வளவு பெரிய விஷயம் என்றால், விரைவான ஒப்பீட்டில் பார்க்கும்போது தத்துவார்த்த இயற்பியலாளரான ஐன்ஸ்டீன் மற்றும் பிரபல அண்டவியல் நிபுணரான பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்கை இவர் முந்தியுள்ளார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இந்தச் சோதனையில் 160 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 

இதுகுறித்து ஷெரிஃபி கூறுகையில், "எனக்குக் கிடைத்த வெற்றியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இவ்வளவு நல்ல மதிப்பெண் பெறுவேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். ஜீனியஸ் மதிப்பெண்களைப் பெற்றதால் தற்போது மென்சாவில் உறுப்பினராகத் தகுதிபெற்றுள்ளார். மென்சா அமைப்பில் உள்ள மற்றவர்களைச் சந்திக்கும் அற்புதமான வாய்ப்பும் இதன்மூலம் அவருக்கு கிடைத்துள்ளது. "பள்ளியில் இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் இதைப்பற்றி  சொன்னேன், அவர்கள் உண்மையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும், இந்தச் சோதனைக்கு செல்ல வேண்டும் என்பது எனது பெற்றோரின் கூட்டு முயற்சியும்தான்" என்றும் கூறியுள்ளார். 

IQ டெஸ்ட்டில் 162 மார்க் எடுத்த மாணவி

இந்த மதிப்பெண்களைக் கண்ட பெற்றோர், "அவர் திறமையானவள் என்பது தெரியும். ஆனால், இவ்வளவு IQ பெறுவாள் என எதிர்பார்க்கவில்லை.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  கேட்கப்படும் கணிதக் கேள்விகளுக்கு போட்டியாளர்களுக்கு முன்னதாகவே சரியான பதில் அளித்துவிடுவாள்.  எதிர்காலத்தில், கணிதத் துறையில் வேலையில் இருக்க விரும்புகிறாள் அவள். எந்தத் துறைக்கு சென்றாலும் சிறந்தவளாக இருப்பாள்" என்று பெருமிதம்கொண்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க