Published:Updated:

வண்ணம்... வாய்ப்பு... வாழ்வு... #1

வண்ணம்... வாய்ப்பு... வாழ்வு... #1
வண்ணம்... வாய்ப்பு... வாழ்வு... #1

வண்ணம்... வாய்ப்பு... வாழ்வு... #1

நிப்பான் பெயின்ட் டீலர்களின் வெற்றிக்கதைகள்...

வாழ்வில் ‘வாய்ப்பு’ என்பது மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் நாம், அதனைக் கெட்டியாக பிடித்துக்கொண்டால்போதும்... அதை வைத்து வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைய முடியும். அந்த முன்னேற்றம் வாழ்க்கையை வண்ணமயமாக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு மூலம் ஏற்பட்ட திருப்புமுனையால் வாழ்வில் சாதித்த சிலரைப் பற்றிய தொகுப்புதான் இது... 

வண்ணம்... வாய்ப்பு... வாழ்வு... #1

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான டீலர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது நிப்பான் பெயின்ட் நிறுவனம். பொருட்களை ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கி, அதனை விற்கும்/விநியோகிக்கும் வியாபாரிகளை டீலர்கள் என்கிறோம். சந்தையைப் பொறுத்தவரை டீலர்கள் அதிமுக்கியமானவர்கள். நீண்ட கால தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள். அந்த வகையில் நிப்பான் பெயின்ட் நிறுவனத்துடனான டீலர்ஷிப்பினால் அடைந்த முன்னேற்றங்கள், தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் திருப்பூரின் கார்த்திக் & கோ நிறுவன தலைவர் தக்ஷிணாமூர்த்தி. 

நிப்பான் பெயின்டுடனான 12 வருட நட்பு...

பன்முகம் கொண்ட கார்த்திக் & கோ நிறுவனம், சுமார் 12 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு அறிமுகமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான நிப்பான் பெயின்ட்டுடன் தனது டீலர்ஷிப்பை முதன்முதலாக ஆரம்பித்தது......
 
“நிப்பான் பெயின்ட்டின் தரம், ஜப்பானிய தொழில்நுட்பம், நெடி இல்லாத தன்மை, குறைந்த விஓசி பொருட்கள் மற்றும் அவர்களின் எளிய வியாபார அணுகுமுறையைப் பார்த்து டீலர்ஷிப்பை நம்பிக்கையோடு எடுத்தோம்.  அந்தக் காலத்தில் தற்போதுபோன்று தயாரிப்புகளை மக்களிடம் புரொமோட் செய்வதற்கான வழிகள் குறைவு. அதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நிப்பானின் தயாரிப்பைப் பற்றிச் சொல்லி அவர்களின் நம்பகத்தன்மையை பெற்றுதான் தயாரிப்புகளை விற்பனை செய்தோம். 

வண்ணம்... வாய்ப்பு... வாழ்வு... #1

இந்தத் தயாரிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாததால் நாங்கள் அவர்களை தேடிச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. இப்போது அப்படியில்லை, எல்லோரும் இணையதளம் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக தெரிந்துகொள்கின்றனர். அதனால் மக்களே விரும்பி நிப்பான் பெயின்ட்டை கேட்டு வாங்கிச் செல்லும் அளவிற்கு வளர்ச்சி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பலவிதமான விளம்பரங்கள் மூலம் வியாபாரம் இரண்டு மடங்கு பெருகியுள்ளது.  இதனால் டீலர்ஷிப் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. தனிப்பட்ட முறையில் நமக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். அது எனக்கு இருந்ததாலும், இரண்டாவது குடும்பமாக எங்களுடன் நிப்பான் நிறுவனம் துணை நின்று ஊக்கமளித்ததாலும்தான் இது சாத்தியம் ஆனது" என்கிறார் தக்ஷிணாமூர்த்தி.  

"கார்த்திக் & கோ-வின் முக்கிய அம்சமாக 'The Select Store' உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லத்திற்கு அடிக்க வேண்டிய பெயின்ட்களை தேர்வு செய்யும் பட்சத்தில், அதை நாங்கள் டிஜிட்டல் ப்ரீவியூ மூலம் அவர்கள் தேர்வு செய்யும் வண்ணங்களை இல்லத்திற்கு பொருத்திக்காட்டுவோம். அதனால் பலரும் வண்ணங்களில் திருப்தி அடைந்து வாங்கிச் செல்கின்றனர்."
 
"தவிர காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் Touch and Feel Texture பேனல்கள் மூலம் பெயின்டின் ஃபினிஷ் எப்படிப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களால் அறிந்துகொள்ள முடிகிறது. எங்கள் இல்லத்திலும் நிப்பான் பெயின்ட்களை உபயோகப்படுத்தியிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளைப் பற்றி விவரிப்பதில் எந்த சிக்கலும் இருந்ததில்லை. எங்களிடம் உள்ள பெயின்ட்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பம், திருப்திக்கேற்ற வகையில் வேலையை முடித்து தருவதில் கைதேர்ந்தவர்கள். எங்களின் ஊழியர்கள் பெரும்பாலும் எங்களுடன் ஆரம்பகாலத்தில் இருந்து பயணிப்பவர்கள் என்பதால் மிகுந்த அனுபவசாலிகளும்கூட. "

வண்ணம்... வாய்ப்பு... வாழ்வு... #1

 "நிப்பான் பெயின்ட் நிறுவனமும் இதுபோன்று பல அனுபவசாலிகளை உருவாக்கி வருகின்றது. அவர்களின் Proceed Academy மூலம் பல தொழில்முறை பெயின்டர்கள் வளர்ந்து வருகின்றனர். தவிர, சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு Nsakthi  திறன் வளர்ச்சி மற்றும் தொழில்வாய்ப்புத் திட்டம் மூலம் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாகவும் செயல்படும் நிப்பான் பெயின்ட் எங்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கிறது. இதுபோல நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை எங்களின் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்து வருகிறோம். அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி முதலான உதவிகளையும் செய்கிறோம். அறக்கட்டளை வாயிலாகவும் உதவிகளை புரிந்துவருகிறோம்" என்கிறார் தக்ஷிணாமூர்த்தி.

புதிய தலைமுறையின் பங்கு...

அடுத்த தலைமுறை தொழில்முனைவோராக தக்ஷிணாமூர்த்தியின் மகள்கள் கவுதமி மற்றும் அணு பிரியங்கா நிறுவனத்தை கவனித்து வருகின்றனர். 

“70-களில் இருந்து எங்கள் குடும்பம் சிமெண்ட், வார்னிஷ் & பெயின்ட் விற்பனையில் ஈடுபட்டுவருகிறது. முழுக்க முழுக்க அய்யாவின் (தாத்தா) உழைப்பு இதில் இருக்கிறது. அவருக்குப் பிறகு அப்பாதான் தொழிலை பார்த்துக்கொள்கிறார். அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அளப்பரியது. அப்போது ஊழியர்கள் யாருமில்லாததால் அப்பாவுக்கு பெரும்பாலும் வெளியில்தான் வேலை இருக்கும். அய்யாவும் அம்மாவும்தான் அலுவலகத்தில் இருந்து வியாபாரத்தை கவனித்துக்கொண்டனர். இதனிடையே அய்யாவின் இழப்பு வியாபாரத்தில் தொய்வை ஏற்படுத்தியது. அப்பாவிற்கு அந்த இழப்பில் இருந்து மீண்டுவர ஒருவருடம் ஆகிவிட்டது. அதனால் வருடாவருடம் கிடைக்கும் நிப்பான் நிறுவனத்தின் விருது அந்த ஆண்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. அதிலிருந்து மீண்டுவந்து அடுத்த வருடத்தில் இருந்து விருதுகளைப் பெற்றோம்.”

“இந்த விருதுகளை அளிக்க ஆண்டுதோறும் எங்களை ஏதாவதொரு வெளிநாட்டிற்கு நிப்பான் நிறுவனம் அழைத்துச் செல்லும். அந்த வெளிநாட்டு பயணங்கள் யாவும் எங்கள் மனதோடு இணைந்தவை. ஒவ்வொருமுறையும் விருதளித்து நிப்பான் எங்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருப்பதால், இந்த முன்னேற்றங்களை எங்களால் அடைய முடிந்தது. ஊக்கமளிப்பும், ஆதரவும்தான் சாதிக்க வேண்டுமென்கிற எண்ணத்தைக் கொடுக்கிறது... அதுவே தாரகமந்திரமாக செயல்படுகிறது” என்கின்றனர் கவுதமி மற்றும் அணு பிரியங்கா.


“சிறுவர்கள் பெரிதும் விரும்பும் பிளாபிகள் நிப்பான் பெயின்ட் நிறுவனத்திற்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றாகிவிட்டுன. அதனால் சிறுவர்கள் எங்களிடம் நிப்பானின் பிளாபிகளை கேட்டு வாங்கிச் செல்ல வருவார்கள். அதிலும் சில சிறுவர்கள் பிளாபிகளுக்காகவே வண்ணப்பூச்சுகளை அடம்பிடித்து வாங்கிச் செல்லும் அளவிற்கு நிப்பான் அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இதுவும் ஒருவகையில் நிப்பானின் வளர்ச்சியையே காட்டுகிறது” என்கின்றனர் தக்ஷிணாமூர்த்தியின் வாரிசுகள்.

நிப்பான் பெயின்ட் நிறுவனம் பற்றி... 

ஆசியாவின் நம்பர் ஒன் பெயின்ட் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது நிப்பான் பெயின்ட் நிறுவனம். நூறு வருடங்களுக்கும் மேலாக வண்ணப்பூச்சுகளுக்கான சந்தையில் முக்கிய இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்திய சந்தையில் நிப்பான் பெயின்ட், வாடிக்கையாளர்களின் வீட்டு உபயோகப் பொருட்களில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.  வீட்டு உபயோகம், உள்ளலங்காரம், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு என அனைத்துவகையான பூச்சுகளையும் நிப்பான் நிறுவனம் வழங்கிவருகிறது. உயர்தர தொழில்நுட்பம் மற்றும் தரமான செயல்திறனிற்காக என்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது நிப்பான் பெயின்ட்!

அடுத்த கட்டுரைக்கு