விற்பனைக்கு வந்துவிட்டது டொயோட்டா கிளான்ஸா... பெலினோவை விட விலை குறைவா?! | Toyota Glanza launched at the price of Rs. 7.22 lakhs

வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (07/06/2019)

கடைசி தொடர்பு:08:43 (07/06/2019)

விற்பனைக்கு வந்துவிட்டது டொயோட்டா கிளான்ஸா... பெலினோவை விட விலை குறைவா?!

சுஸுகி-டொயோட்டா தொழில்நுட்பக் கூட்டணியில் முதல் காராக விற்பனைக்கு வந்துவிட்டது டொயோட்டா கிளான்ஸா. மாருதி பெலினோவின் பேட்ஜ் மாற்றப்பட்ட வெர்ஷனான இந்த கார் இரண்டு வேரியன்ட்டுகளிலும், மூன்று இன்ஜின் மற்றும் கியார்பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வந்துள்ளது. கிளான்ஸாவுக்கு ரூ.7.22 லட்சத்தில் இருந்து ரூ.8.90 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையை நிர்ணயித்துள்ளது டெயோட்டா. 

டொயோட்டா கிளான்ஸா

தோற்றத்தில் இரு கார்களும் ஒன்றாகத் தெரிந்தாலும் முன்பக்க க்ரில் - ஹெட்லைட் - பேட்ஜிங் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் உண்டு. பெலினோவில் ஜீட்டா, ஆல்ஃப் வேரியன்ட் போல கிளான்ஸாவில் G,V என இரண்டு வேரியன்ட் வருகிறது. பெலினோவைப் போலவே இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உண்டு. K12C 1.2 லிட்டர் டூயல் ஜெட் ஸ்மார்ட் ஹைப்ரிட் இன்ஜின் விலை குறைவான G வேரியன்ட்டில் மட்டுமே வருகிறது. V வேரியன்ட்டில் மாருதியின் K12B இன்ஜின் இருக்கிறது. G MT ஸ்மார்ட் ஹைப்ரிட் - ரூ.7.22 லட்சம்; G CVT - ரூ.8.30 லட்சம்; V MT - ரூ.7.58 லட்சம்; V CVT - ரூ.8.90 லட்சம் என மொத்தம் 4 வகையாக வருகிறது கிளான்ஸா.

Toyota Glanza

இதில் இருக்கும் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுமே பிஎஸ்-VI விதிமுறைகளுக்கு உட்பட்டவை. CVT கியர்பாக்ஸுடன் கிடைக்கும் 1.2 லிட்டர் K12B இன்ஜின் 83bhp பவர் மற்றும் 113Nm டார்க் தருகிறது. மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும் 1.2 லிட்டர் K12C டுயல் ஜெட் இன்ஜின் 90bhp பவரும் 113Nm டார்க்கும் தருகிறது. இந்த இன்ஜினில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இருப்பதால் இது அராய் டெஸ்ட்டில் 23.87 கி.மீ மைலேஜ் கொடுத்துள்ளது. K12B இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸுடன் லிட்டருக்கு 21.01 கி.மீ மைலேஜும், CVT கியர்பாக்ஸோடு 19.56 கி.மீ மைலேஜும் கொடுக்கும். மாருதி பெலினோவின் அதே மைலேஜ்தான்.

Glanza launch

கிளான்ஸாவின் G வேரியன்ட்டில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், உயரம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடுத், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஜிபிஎஸ் நேவிகேஷன், வாய்ஸ் கன்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, ஸ்டியரிங்கில் ஆடியோ கன்ட்ரோல், டூயல் டோன் அலாய் வீல் போன்ற வசதிகள் உள்ளன. V வேரியன்ட்டில் கூடுதலாக UV-cut கண்ணாடிகள், ஹெட்லைட்டில் LED DRL, புதிய LED டெயில் லைட், லெதர் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ், Follow me ஹெட்லைட், ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகள் வருகின்றன. பாதுகாப்பு அம்சங்களான ABS, EBD, 2 காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவை இரண்டு வேரியன்ட்டிலும் உள்ளன.  

Glanza touchscreen

பெலினோவில் இருந்து கிளான்ஸாவை வித்தியாசப்படுத்திக் காட்டும் விஷயம் இதன் விலை மற்றும் சர்வீஸ். கிளான்ஸாவின் விலை குறைவான G Smart Hybrid MT வேரியன்ட் பெலினோவின் ஜீட்டா பெட்ரோல் ஸ்மார்ட் ஹைப்ரிட் காரைவிட ரூ.70,000 விலை குறைவு. மேலும், கிளான்ஸா 3 ஆண்டுகள்/1 லட்சம் கி.மீ வாரன்ட்டியோடு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ரோடு சைடு அசிஸ்டென்ஸும் இலவசம். பெலினோ, 2 ஆண்டுகள்/40,000 கி.மீ வாரன்ட்டியோடு மட்டுமே கிடைக்கிறது. மேலும், பெலினோ உருவாகும் அதே அசெம்பளி லைனில்தான் கிளான்ஸா உருவாகிறது என்றாலும் காரின் உதிரிபாகங்களை டொயோட்டாவே பார்த்துக்கொள்கிறது.  டொயோட்டாவில் கிடைக்கும் 60 நிமிட எக்ஸ்பிரஸ் மெயின்டனன்ஸ் மாருதியில் கிடையாது. 


டிரெண்டிங் @ விகடன்