`பூமியின் அருகில் வரும் வியாழன்!' - வெறும் கண்களால் பார்க்கலாம் | 'Jupiter is at opposition with earth' Can be seen with naked eye

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (09/06/2019)

கடைசி தொடர்பு:16:30 (09/06/2019)

`பூமியின் அருகில் வரும் வியாழன்!' - வெறும் கண்களால் பார்க்கலாம்

நம் சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் தற்போது பூமிக்கு மிகவும் அருகில் இருக்கிறது. சூரியன், பூமி, வியாழன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதால் இரவில் வியாழனை நம்மால் பார்க்கமுடியும். இதை ஆங்கிலத்தில் `Opposition' என்று அழைப்பர். மேலும், இந்த நேரத்தில் நமது பார்வையிலிருந்து சூரியனின் ஒளி அதிகமாக விழுவதால் மிகவும் பிரகாசமாக இருக்கும் வியாழன். இதனால் வெறும் கண்களாலேயே வியாழனை பார்க்கமுடியும் என்கிறது நாசா. சிறிய பைனாகுலர் அல்லது தொலைநோக்கி இருந்தால் வியாழனை சுற்றிவரும் நான்கு பெரிய நிலாக்களையும் சேர்த்து பார்க்கமுடியுமாம்.

'Jupiter at Opposition', Photo: NASA 

'Jupiter at Opposition', Photo: NASA 

கிட்டத்தட்ட இந்த மாதம் முழுவதும் பார்க்கமுடியும் என்றாலும் ஜூன் 10 அன்றுதான் பூமியின் மிக அருகில் இருக்கும் வியாழன். இது மிகவும் அபூர்வமான நிகழ்வு இல்லை. பூமி சூரியனை சற்றே சிறிய வட்டப்பாதையில் சுற்றிவரும், இதனால் பூமிக்கு சூரியனை முழுவதுமாக சுற்றிவர 12 மாதங்கள். இதே வியாழன் சுற்றிவர 12 வருடங்கள் ஆகும். வியாழன் ஒரே இடத்தில் நகராமல் இருந்தால் 12 மாதங்களுக்கு ஒருமுறை வியாழனின் அருகில் வந்து செல்லும் பூமி. வியாழன் சற்றே மெதுவாகச் சூரியனை சுற்றிவந்துகொண்டிருப்பதால் இப்போது இந்த `Opposition' 13 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும். அதாவது அடுத்தமுறை ஜூலை 2020-ல் நிகழும். நாளை இரவு நட்சத்திரங்களைப்போல மின்னாத பிரகாசமாக ஒரு புள்ளி தெரிந்தால் அதுதான் வியாழன்!

பூமியிலிருந்து வியாழன்

இதுமட்டுமில்லாமல் இந்த மாதத்தின் நடுவில் புதன் மற்றும் செவ்வாய் கிரகங்களும் வியாழன் அருகில் தென்படும். 

link: twitter.com/NASASolarSystem/status/1135567548697665537

நீங்க எப்படி பீல் பண்றீங்க